தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rip Daniel Balaji: Where Is Daniel Balaji's Body To Be Cremated?

RIP Daniel Balaji: மாரடைப்பால் காலமான டேனியல் பாலாஜி.. வீட்டு முகவரி என்ன.. நல்லடக்கம் எங்கே? - முழு விபரம்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 30, 2024 07:33 AM IST

2003 ம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தின் மூலம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அறிமுகமான டேனியலுக்கு, காக்க காக்க படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம், அவருக்கு பேர் வாங்கித் தந்தது.

ஆர்.ஜே.பாலாஜி!
ஆர்.ஜே.பாலாஜி!

ட்ரெண்டிங் செய்திகள்

அதில், “அன்புச் சகோதரர், என் நண்பர்

டேனியல் பாலாஜி அவர்களின் உடல்

ஓட்டேரி அரசு மின் மயானத்தில் இன்று மதியம் தகனம் செய்யப்பட இருக்கிறது. ” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது

அவர் உடல் வைக்கப்பட்டுள்ள அவர் வீட்டின் முகவரி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக, தமிழ் சினிமாவில் வித்தியாசமான வில்லன் நடிகராக அறியப்படும் நடிகர் டேனியல் பாலாஜி, மாரடைப்பு காரணமாக திடீரென காலமானார். 48 வயதான அவர், கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2003 ம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தின் மூலம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அறிமுகமான டேனியலுக்கு, காக்க காக்க படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம், அவருக்கு பேர் வாங்கித் தந்தது.

தொடர்ந்து பல்வேறு படங்களில் அவர் அடுத்தடுத்து நடித்திருந்தாலும், 2006ம் ஆண்டு அவர் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம், அவருக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தது. அமுதன் என்கிற அந்த கதாபாத்திரம், வேட்டையாடு விளையாடு படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது என்றே கூறலாம்.

அதைத் தொடர்ந்து 2007 ல் வெற்றி மாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்தில் ரவி என்கிற கதாபாத்திரமும், டேனியல் பாலாஜிக்கு பெரிய அளவில் பேரை தந்தது. ஆனாலும் அதன் பின் பெரிய அளவில் அவர் படங்களில் தோன்றவில்லை. குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் நடித்தார். வடசென்னை திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த தம்பி கதாபாத்திரம் அவரை வித்தியாசமான கோணத்தில் காட்டியது. 

சமீபத்தில் ஆன்மிக வழியில் அதிக நாட்டம் கொண்டவராக மாறிய டேனியல் பாலாஜி, கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட ஆன்மிக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். திரைத்துறையில் நேர்மையாகவும், தன் திறமை மீது அதீத நம்பிக்கை கொண்டவராகவும் காணப்பட்ட டேனியல் பாலாஜி, இளம் வயதில் காலமான சம்பவம், அவரது ரசிகர்களை மட்டுமின்றி, திரைத்துறையில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேனியல் பாலாஜியின் இறப்பு செய்தி கேட்டு, தற்போது தான் ஒவ்வொருவராக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்