தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rip Bhavatharini: The Family Bid Farewell To Ilayaraja Daughter Bhavadharani By Singing The Song Mayil Pola Ponnu Onnu

RIP Bhavatharini: ‘மயில் போல பொண்ணு ஒன்னு’…கூட்டாக பாடிய குடும்பம்.. நெஞ்சடைத்த சோகம்.. விம்மி அழுத உறவுகள்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 27, 2024 06:13 PM IST

47 வயதான பாடகி பவதாரிணியின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல். முருகன், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

பிரியா விடை கொடுத்த குடும்பத்தினர்
பிரியா விடை கொடுத்த குடும்பத்தினர்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனிடையே, அவர் சிகிச்சை பலன்றி திடீரென்று நேற்று முன் தினம் காலமானார்; இதைக்கேட்ட இளையராஜா குடும்பத்தினர் கதறி அழுதனர். இசை நிகழ்ச்சிக்காக இலங்கை சென்று இருந்த இளையராஜா, மகளை மருத்துவமனையில் நேரில் பார்த்து கண்கலங்கினார்.

47 வயதான பாடகி பவதாரிணியின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல். முருகன், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

அவரின் உடல் இலங்கையில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் வழியாக சென்னை கொண்டுவரப்பட்டது. மாலை, பவதாரிணியின் உடல் சென்னை டி.நகரில் இருக்கும் இளையராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, விஷ்ணு, சதீஷ், சிலம்பரசன், மணிரத்னம், மிஷ்கின், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, எழில், வெங்கட் பிரபு, வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுதா கொங்கரா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, பவதாரிணியின் உடல் இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் பவதாரணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை குடும்பத்தினர் செய்து அடக்கம் செய்வதற்கான வேலைகளை செய்து வருகின்றனர். அப்போது பவதாரணி பாடி தேசிய விருது பெற்ற,மயில் போல பொண்ணு ஒன்னு பாடலை குடும்பத்தினர் கூட்டாக பாடி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.