Tamil News  /  Entertainment  /  Rip Bhavatharini: Bayilvan Ranganathan Latest Interview About Bhavatharini Marriage Life And Death

RIP Bhavatharini: கண்ணை மறைத்த காதல்.. நல்லறம் ஆகாத இல்லறம்.. - தோல்வியில் முடிந்த பவதாரிணி திருமண வாழ்கை! - பயில்வான்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 28, 2024 05:30 AM IST

பவதாரிணியின் காதல் வாழ்க்கை குறித்து பிரபல பத்திரிகையாளர் பேசி இருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன்!
பயில்வான் ரங்கநாதன்!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “ பவதாரிணி, வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் முன்னரே காதலில் விழுந்து விட்டார். அவர் சினிமாலயா பத்திரிகை அதிபர் எஸ் என் ராமச்சந்திரனை காதலித்தார். அந்த காதல் அவர்கள் நினைத்தபடியே கைகூடியது. இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் அவர்களது இல்லற வாழ்க்கையானது அவர்கள் நினைத்தது போல அமையவில்லை. 

இதனையடுத்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட, இருவரும் தத்தமது வழிகளைப் பார்த்து சென்று விட்டனர். பவதாரிணி அப்பாவுடன் வந்து விட்டார்.

இந்த நிலையில்தான் பவதாரிணிக்கு பித்தப்பையில் கல் இருப்பது தெரிய வருகிறது. இதனையடுத்து அதனை கரைத்து விடலாம் என்று முயற்சி செய்து, மருத்துவமனை படியேறியிருக்கிறார்கள். ஆனால் அது புற்றுநோயாக மாறிவிட்டது. காலப்போக்கில் அந்த புற்றுநோயானது சிறுநீரகத்திலும் பரவி விட்டது. 

அதனை குணப்படுத்த நிறைய மருத்துவ சிகிச்சைகளை பவதாரிணி மேற்கொண்டு வந்தார். ஆனால் அவருக்கு உடல்நிலை சரிவர வில்லை. இளையராஜா பல வெளிநாடுகளில் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்தார். 

கடைசியில் அது எதுவும் வேலைக்காகாது என்பதை உணர்ந்து ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறினார்கள். பவதாரணிக்கு தன்னுடைய மரண நாள் எது என்பது முன்னமே தெரிந்து விட்டது. ஆம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு பிறந்தநாள். அந்த நாளில் அவர் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து எனக்கு புற்றுநோய் இருப்பதை மிகவும் இயல்பாக சிரித்துக்கொண்டே சொல்லி இருக்கிறார்” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.