தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Bhavatharani: 'தாய் மற்றும் மனைவியின் சமாதிக்கு நடுவில் மகள்' இளையராஜாவின் முடிவு

Rip Bhavatharani: 'தாய் மற்றும் மனைவியின் சமாதிக்கு நடுவில் மகள்' இளையராஜாவின் முடிவு

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 27, 2024 10:28 AM IST

6 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தார். இலங்கையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 மாலை 5.20 மணிக்கு மரணம் அடைந்தார் . நேற்று மாலை அவர் உடல் சென்னை விமானம் மலம் எடுத்து வரப்பட்டது. இன்று இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணை பிரத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தாய் மகளின் சமாதிக்கு நடுவில் இளையராஜா மகள் நல்லடக்கம்
தாய் மகளின் சமாதிக்கு நடுவில் இளையராஜா மகள் நல்லடக்கம்

இளையராஜாவின் தாய் மற்றும் மனைவியின் சமாதிக்கு நடுவில் மனைவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் உயிர் இழந்த இளையராஜாவின் மகள் பவதாரணி உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது இதற்காக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள இளையராஜா பண்ணை வீட்டிற்கு இன்னும் சற்று நேரத்தில் பவதாரினியின் உடல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜா விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்து அங்கிருந்து பண்ணை வீட்டிற்கு காலை செல்கிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக உயிரிழந்த இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவா என இருவரது உடல் அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சமாதிக்கு நடுவில் மகள் பவதாரிணியின் உடலை அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது

மேலும் இளையராஜாவின் குடும்ப உறுப்பினர்கள் சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் இந்த பகுதிக்கு வருகை தர உள்ளனர்.

முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக  ஜனவரி 25 காலமானார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

அவர் புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக பவதாரணி சமீபத்தில் இலங்கை சென்று உள்ளார். ஆயுர்வேத சிகிச்சை பலனளிக்காத நிலையில் இலங்கையில் காலமானார்.

6 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தார். இலங்கையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 மாலை 5.20 மணிக்கு மரணம் அடைந்தார் . நேற்று மாலை அவர் உடல் சென்னை விமானம் மலம் எடுத்து வரப்பட்டது. இன்று இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணை பிரத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

பவதாரணிக்கு தற்போது 47 வயதாகிறது. இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்து உள்ளது.

சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். பவதாரிணி, பிரபல இசையமைப்பாளர் இளையராஜவின் மகள். கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி ஆவார். பவதாரிணி கடந்த 2005ஆம் ஆண்டு சபரி ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சபரி ராஜன் ஹோட்டல் பிஸினஸ் செய்து வருகிறார். மேலும் பாவதாரிணியும் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் அதிகம் பாடியுள்ளார்.

இளையராஜா இசையில் பாரதி படத்தில் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடல் பாடிய பவதாரிணிக்கு, சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அழகி’ படத்தில் இவர் பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. மேலும், ‘உல்லாசம்’ படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த 'அநேகன்’ படத்தில் 'ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி' பாட்டும் பவதாரிணியின் தனித்துவமான குரலுக்கு மிகப்பெரிய சான்றாகும்.