தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rip Bhavatharani: 'Come And See Your Sister At Last' Bhavatharani's Cousin Hasini Shouted!

Rip Bhavatharani: 'உன் அக்காவை கடைசியா வந்து பார்த்துட்டு போ' பவதாரணி உறவினர் ஹாசினி கதறல்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 26, 2024 09:41 AM IST

நாங்க போனப்ப பவதா எங்க அப்பாவ பார்த்து பவதா அழுதுச்சு. ஏன்னா எங்க அப்பா பவதாக்கு சொந்த தாய்மாமா. அவங்கள பார்த்த உடனே மூர்த்தி மாமா அப்படின்னு அழுதுச்சு. அப்பறம் ஒன்று இல்லடா ஒன்னும் பிரச்சனை இல்ல பார்த்துக்கலாம் அப்படின்னாங்க அப்பா.

பவதாரணியின் உறவினர் ஹாசினி கதறல்
பவதாரணியின் உறவினர் ஹாசினி கதறல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் பவதாரணியின் தாய் மாமா மகளான ஹாசினி கலாட்டா பிங்க் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் உங்க அக்காவ வந்து கடைசியா பார்த்துட்போ என்று பவதாரணியின் கணவர் கூறிதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், எங்களுக்கு ஒரு மாதத்திற்கு முன் பவதாரணி புற்று நோயின் 4 வது நிலையில் உள்ளார் என்பது தெரியும். அவங்களுக்கு டிஹைட்ரேஷன்னு சொல்லி அட்மிட் பண்ணி இருந்தாங்க. நா பவதாரணியின் கணவரிடம் பேசினேன். எங்க மாமா இருக்கீங்கன்னு கேட்டேன். ஹால்பிடல்ல இருக்னேன்னார். என்னாச்சுன்னு கேட்டதுக்கு அவர் அழுக ஆரம்பிச்சுட்டார். உங்க அக்காவ வந்து கடைசியா பார்த்துட்டு போ அப்படின்னார். எனக்கு புரில என்னாச்சுன்னு நா கேட்டேன். அவளுக்கு கேன்சர் 4ஆவது கட்டம் என்றார். அப்பவே எனக்கு மைண்ட் பிளாங்க் ஆகிடுச்சு.

என்னனு கேட்டதுக்கு இப்பதா செக் பண்ணோம் என்றார். ஆனா எல்லாருமே ஹரி.. யுவன் எல்லாருமே அவகிட்ட சொல்லிடாதீங்கன்னு சொன்னாங்க. சரின்னு நாங்க புரிஞ்சுக்கிட்டோம். நாங்க போய் பார்த்தோம். பவதாரணி நார்மலாதா பேசிட்டு இருந்தாங்க.

எங்க அம்மா எல்லா ரிப்போட்டையும் வாங்கிட்டு வந்து அவங்க மாமாட்ட காட்டினாங்க. அவங்களும் டாக்டர்தான். ஆனா அவரும் ரிப்போர்ட்ஸ் பார்த்துட்டு பேசாம விட்டுருங்க. ஆமா 4 ஆவது ஸ்டேஸ்லதா இருக்காங்கன்னு சொன்னாங்க.

அதுக்கு முன்னாடி போன வருடம் கொலுவுக்கு நாங்க போன போது அவங்க ரெம்ப ஒல்லியா இருந்தாங்க. நானும் அம்மாவும் பார்த்து ரெம்ப பயந்துட்டோம். அம்மா கேட்டாங்க என்ன பவதா இவ்வளவு ஒல்லியா இருக்க? என்ன பிரச்சனை உனக்கு. சாப்பிடமாட்டியா நீ சரியான்னு கேட்டாங்க? அதுக்கு பவதா இல்ல.. இல்ல.. நா டயட்டில் இருக்கேன் என்றார். என்ன இது நல்லா போஷாக்கா சாப்பிடுப்பா என்று சொன்னதுக்கு சரி என்றார்.

என்னன்னு சொல்லவே தெரியலங்க. நா போன வருடம் கொலுக்கு போனேன். 15 வருடம் கழிச்சு அவங்க கூட உட்காந்து கொலுல பாடுனேன். ஆனா அந்த பாட்டுதா நா அவங்க கூட கடைசியா பாடுவேன்னு ஐடியாவே இல்ல.

டாக்டர்கள் எல்லாருமே அவங்க உடம்ப தேத்திட்டு வர சொல்லுங்க அப்பதா ட்ரீட்மெண்டே பண்ண முடியும்னு சொன்னாதாக என்ட சொன்னாங்க என்றார்.

நான் கேட்டதை சொல்கிறேன். 2020லேயே அவங்களுக்கு பித்தப்பையில் ஏதோ பிராப்ளம் இருக்குன்றத சொல்லிருக்காங்க. அது என்னனா இவங்க ஸ்டோன்னு நினச்சுக்கிட்டாங்களா என்னனு தெரில. ஆனா என்ன புரிச்சுக்கிட்டாங்கன்றதும் எனக்கு தெரில. அதுக்கு அப்பறம்தா அவங்களுக்கு வயிறு பிராப்ளம், ஜீரணம் ஆகுவதில் பிரச்சனை அப்படி எல்லாம் இருந்துருங்கு. ஆனா உடம்புல சுத்தமா தண்ணி இல்ல அப்படின்னு தான் அட்மிட் பண்ணாங்க..

நாங்க போனப்ப பவதா எங்க அப்பாவ பார்த்து பவதாரணி அழுதுச்சு. ஏன்னா எங்க அப்பா பவதாரணிக்கு சொந்த தாய்மாமா. அவங்கள பார்த்த உடனே மூர்த்தி மாமா அப்படின்னு அழுதுச்சு. அப்பறம் ஒன்று இல்லடா ஒன்னும் பிரச்சனை இல்ல பார்த்துக்கலாம் அப்படின்னாங்க அப்பா. நாங்க எல்லாரும் ஏதாவது ஒன்று பண்ணி கொஞ்ச வருடம் அவங்க நல்லா இருக்க வச்சுக்கலாம் என்று நினைச்சோம் ஆனா முடில என்று தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.

நன்றி: Galatta Pink

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.