தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Bhavatharani: 'உடைந்து அழுத பவதாரணி.. தாங்கி பிடித்த இசைஞானி' வைரல் வீடியோ!

Rip Bhavatharani: 'உடைந்து அழுத பவதாரணி.. தாங்கி பிடித்த இசைஞானி' வைரல் வீடியோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 27, 2024 09:17 AM IST

Ilayaraja Daughter Bhavatharani: பவதாரணியின் முதுகில் தட்டி கொடுத்து தேற்றுகிறார். அந்த பாடலை உணர்ச்சி வசத்தால் பாட முடியாமல் தவிக்கும் மகளுடன் சேர்ந்து தானும் பாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

'உடைந்து அழுத பவதாரணி.. தாங்கி பிடித்த இசைஞானி' வைரல் வீடியோ!
'உடைந்து அழுத பவதாரணி.. தாங்கி பிடித்த இசைஞானி' வைரல் வீடியோ!

ட்ரெண்டிங் செய்திகள்

இளையராஜா இசை அமைத்து பிரபலமான ராஜாவின் ரமண மாலையில் ஆராவமுதே என்ற பாடலை இளையராஜாவும் சிறுமியாக இருந்த பவதாரணியும் சேர்ந்து மேடையில் பாடுகின்றனர். ராஜாவின் இசையில் அந்த பாடலுக்கு என்றுமே தனி ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. கேட்பவர்களை மெய் மறக்கச் செய்யும் பாடல்களில் அதுவும் ஒன்று. அந்த பாடலின் சரணத்தை பாடும் போது பவதாரணி தேம்பி தேம்பி அழுகிறார்.

இதை கவனித்த இளைய ராஜா பவதாரணியின் முதுகில் தட்டி கொடுத்து தேற்றுகிறார். அந்த பாடலை உணர்ச்சி வசத்தால் பாட முடியாமல் தவிக்கும் மகளுடன் சேர்ந்து தானும் பாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் இளைய ராஜாவை அவரது இசைதான் தேற்ற முடியும் என்ற வகையில் தங்களது ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் பவதாரணியை இளையராஜா தேற்றி விட்டார். ஆனால் இப்போது இளைய ராஜாவை யார் தேற்றுவார்கள் என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று பவதாரிணியின் உடல் இளையராஜா வீட்டிற்கு எடுத்து வரப்பட்ட நிலையில் தனது எக்ஸ் பதிவில் அன்பு மகளே என பதிவிட்டிருந்தார். அதில் க்யூட்டான குழந்தையாக இளையராஜாவுடன் இருக்கும் பவதாராணி இருக்கும் படத்தையும் பகிர்ந்தார். அதைப்பார்த்த அவரது ரசிகர்கள் ராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று ( ஜன.25) மாலை 5.20 மணிக்கு இலங்கையில் காலமானார். புற்றுநோய் காரணமாக ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்த அவர் சிகிச்சைப் பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 47. இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இதனிடையே நேற்று இலங்கையில் இருந்து அவரது உடல் சென்னைக்கு நேற்று கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள இளைய ராஜா வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று பிற்பகல் அவரது உடல் இளையராஜாவின் பண்ணை வீட்டில் பவதாரயின் தாயார் நினைவு மண்டபம் அருகே நல்லடக்கம் செய்யட உள்ளது.

சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். பவதாரிணி, பிரபல இசையமைப்பாளர் இளையராஜவின் மகள். கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி ஆவார். பவதாரிணி கடந்த 2005ஆம் ஆண்டு சபரி ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சபரி ராஜன் ஹோட்டல் பிஸினஸ் செய்து வருகிறார். மேலும் பாவதாரிணியும் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் அதிகம் பாடியுள்ளார்.

இளையராஜா இசையில் பாரதி படத்தில் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடல் பாடிய பவதாரிணிக்கு, சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.