Anant Ambani: விடிய விடிய பார்ட்டி.. செக்ஸி மூவ்மெண்டுகளால் கிறங்க வைத்த ரிஹானா! - அனல் பறந்த அம்பானி வீடு!
இந்த நிகழ்வில் பிரபல பாப் பாடகியான ரிஹானா இசைக்கச்சேரி நடத்தினார். அவருடைய பாடல்களையும், நடனத்தையும் அங்கிருந்த அனைவரும் ரசித்தனர்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட்டை கரம் பிடிக்க இருக்கிறார்.
இவர்களது திருமணம் வருகிற ஜூலை மாதம் நடக்க இருக்கிறது. இவர்களது திருமணத்திற்கான ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் மூன்று நாள்கள் குஜராத் ஜாம்நகர் பகுதியில் இருக்கும், அம்பானியின் எஸ்டேட்டில் வைத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நேற்று முன் தினம் தொடங்கியது.
முதற்கட்டமாக அன்ன சேவா என்ற பெயரில் அங்குள்ள உள்ளூர்வாசிகள் 51,000 பேருக்கு அம்பானி குடும்பம் தன்னுடைய கைப்பட உணவு பரிமாறியது. இந்த அன்ன சேவா இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் ‘An Evening in Everland’ என்ற பெயரில், மாலை கொண்டாட்டங்கள் தொடங்கின.
இந்த கொண்டாட்டத்தில் தோனி, ரன்வீர் சிங், இயக்குநர் அட்லி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரபல பாப் பாடகியான ரிஹானா இசைக்கச்சேரி நடத்தினார். அவருடைய பாடல்களையும், நடனத்தையும் அங்கிருந்த அனைவரும் ரசித்தனர்.
Rude Boy, Pour it Up, Diamonds, Wild Things உள்ளிட்ட பல பாடல்களை பாடிய ரிஹானா, தன்னுடைய செக்ஸியான மூவ்மெண்டுகளால் கிறங்க வைத்தார். அது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
ரிஹானாவிற்கு ஆனந்த் அம்பானி திருமணத்தில் பாடுவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 52 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டு இருப்பதாக டெய்லி மெயில் இணையதளம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக கொண்டாட்டங்களுக்கு 120 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், சாப்பாட்டிற்கு மட்டும் 20 மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளம் குறிப்பிட்டு இருக்கிறது..

டாபிக்ஸ்