தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rihanna Being Paid 52 Crore To Perform At Anant Radhika Pre-wedding

Anant Ambani: கோடிகளை அள்ளி இறைத்த அம்பானி.. ரிஹானாவிற்கு மட்டும் 50 கோடி- கிறுகிறுக்க வைக்கும் மகன் கல்யாண செலவு!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 01, 2024 01:35 PM IST

ரிஹானாவிற்கு அம்பானி கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Rihanna was spotted arriving in Jamnagar on Thursday to perform at Anant Ambani and Radhika Merchant's wedding
Rihanna was spotted arriving in Jamnagar on Thursday to perform at Anant Ambani and Radhika Merchant's wedding

ட்ரெண்டிங் செய்திகள்

இவர்களது திருமணம் வருகிற ஜூலை மாதம் நடக்க இருக்கிறது. இவர்களது திருமணத்திற்கான ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் மூன்று நாள்கள் குஜராத் ஜாம்நகர் பகுதியில் இருக்கும், அம்பானியின் எஸ்டேட்டில் வைத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கியது.

அன்ன சேவா என்ற பெயரில் அங்குள்ள உள்ளூர்வாசிகள் 51,000 பேருக்கு அம்பானி குடும்பம் தன்னுடைய கைப்பட உணவு பரிமாறியது. இந்த அன்ன சேவா இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‘An Evening in Everland’ என்ற பெயரில் இன்றைய தினம் மாலை கொண்டாட்டங்கள் அரங்கேற இருக்கின்றன.

இதில் பாலிவுட்டின் முன்னணி பிரபலங்களான ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சல்மான் கான், அர்ஜூன் கபூர், , அமிதாப் பச்சன், அமீர்கான், அஜய் தேவ்கன், கஜோல், இயக்குநர் அட்லி, அலியா பட், விக்கி கெளசல் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்த நிகழ்வில் பிரபல பாப் பாடகியான ரிஹானா பாட இருக்கிறார். இதற்காக அவர் தன்னுடைய பார்ட்னர் ராக்கியுடன் குஜராத் வந்து இறங்கினார். அவர் சார்பாக வந்திறங்கிய அவரது லக்கேஷ் பேசு பொருளாக மாறியது. 

இந்த நிலையில் அவருக்கு ஆனந்த் அம்பானி திருமணத்தில் பாடுவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 52 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டு இருப்பதாக டெய்லி மெயில் இணையதளம் கூறியிருக்கிறது. 

மொத்தமாக கொண்டாட்டங்களுக்கு 120 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், சாப்பாட்டிற்கு மட்டும் 20 மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளம் குறிப்பிட்டு இருக்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்