L2 Empuraan: ‘மீண்டும் தணிக்கை..’ வலதுசாரி எதிர்ப்பு.. எம்புரான் படத்தில் 17 திருத்தங்கள் செய்ய முடிவு!
L2 Empuraan: திருத்தப்பட்ட பதிப்பு பெண்களுக்கெதிரான வன்முறையைக் குறைக்கும் என்றும், மத வெறுப்பை தூண்டும் காட்சிகள் நீக்கப்படும் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

L2 Empuraan: மோகன்லால் நடிப்பில் 'எல்2: எம்புரான்' திரைப்படம் 2025 மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் பெரிய திரைக்கு வந்தவுடன், கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது, தயாரிப்பாளர்கள் சில மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளனர். மனோரமா நியூஸ் செய்தியின் படி, படத்தில் 17 வெட்டுகள் செய்யப்பட்டு, தணிக்கை ஒப்புதலுக்காக மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாம்.
அடுத்த வாரம் திருத்தப்பட்ட காட்சிகள்
பல வலதுசாரி அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் தாங்களாகவே மாற்றங்களைச் செய்ய முடிவு செய்ததாக , மனோரமா நியூஸ் செய்தி அறிக்கை கூறுகிறது. படம் தணிக்கை வாரியத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட பதிப்பு அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
