மீண்டும் மீண்டும் ட்ரோல்.. ஒரு வழியாக ஓடிடி கரை ஒதுங்கிய ரெட்ரோ திரைப்படம்! - முழு விபரம் இங்கே!
மக்கள் சிலர் ரெட்ரோ படத்தை கடுமையாக ட்ரோலும் செய்தனர். இருப்பினும் வசூலில் எந்த வித பாதிப்பும் இல்லை என்பதை கூறும் விதமாக ரெட்ரோ திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

மீண்டும் மீண்டும் ட்ரோல்.. ஒரு வழியாக ஓடிடி கரை ஒதுங்கிய ரெட்ரோ திரைப்படம்! - முழு விபரம் இங்கே!
சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியைப் பெற்றுத்தரும் என்று சூர்யா எதிர்பார்த்தார்.ஆனால், அந்தப்படம் அதனை பூர்த்தி செய்யவில்லை. மக்கள் சிலர் அந்தப்படத்தை கடுமையாக ட்ரோலும் செய்தனர். இருப்பினும் வசூலில் எந்த வித பாதிப்பும் இல்லை என்பதை கூறும் விதமாக ரெட்ரோ திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
மேலும் படிக்க | ‘8 வாரங்கள் கழித்தே தக் லைஃப் படம் ஓடிடியில் வெளியாகும்.. எந்த ஓடிடியில் தெரியுமா?’ - மேடையில் அறிவித்த கமல்ஹாசன்!
ஓடிடியில் எப்போது ரிலீஸ்?
இந்த நிலையில் ரெட்ரோ திரைப்பட ஓடிடி ரிலீஸ் தொடர்பான அப்டேட் வெளியாகி இருக்கிறது. இது குறித்து வெளியான அறிவிப்பில் ரெட்ரோ திரைப்படம் வருகிற மே 31ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒளிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

