Retro OTT release: ‘ஒரு ஆணின் கோபம்தான் ரெட்ரோ..’ - சூர்யாவின் ‘ரெட்ரோ’ எந்த ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?
Retro OTT release: மே 1 அன்று சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் ரெட்ரோ படத்தை ரசிகர்கள் மட்டுமல்ல, சூர்யாவும் பெரும் எதிர்பார்ப்போடு எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்.

Retro OTT release: நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அந்தத்திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. இதில் மொத்தமாக நொந்து போனார் சூர்யா. காரணம் அதற்கு முன்னதாக தியேட்டரில் வெளியான எதற்கும் துணிந்தவன் படமும் தோல்வி அடைந்தது.
பெரும் எதிர்பார்ப்பு
அதனால், மே 1 அன்று சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் ரெட்ரோ படத்தை ரசிகர்கள் மட்டுமல்ல, சூர்யாவும் பெரும் எதிர்பார்ப்போடு எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார். படத்தின் பாடல்களும், டீசரும் எகிடுதகிடு ஹிட்டடித்து இருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 18ம் தேதி நடக்க இருப்பதாகவும், இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
ரெட்ரோ எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ரெட்ரோ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இது குறித்து முன்னதாக வெளியான அறிவிப்பில், ‘ ஒரு ஆணின் அன்பு மலைகளையே பெயர்த்துவிடும், ஆனால் அவனுடைய கோபம்? அதுதான் ரெட்ரோ!.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரெட்ரோ திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்’ என்று குறிப்பிட்டு இருந்தது.
சூர்யாவின் 44 பட தலைப்பு
இந்த படத்தை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் புதிய படத்தில் சூர்யாநடித்து வருகிறார்; சூர்யா 45 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். 2005இல் வெளியான ஆறு படத்துக்கு பின்னர் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா - த்ரிஷா ஆகியோர் மீண்டும் இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.
அத்துடன் படத்தின் இயக்குநரான ஆர்.ஜே. பாலாஜியே, சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கிறாராம். படம் லீகல் ட்ராமா பாணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்தப்படத்திற்கு படத்துக்கு பேட்டைக்காரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
சூர்யா 45 படம்
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் லப்பர் பந்து படத்தில் நடித்த சுவாசிகா, ஷிஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகர் இந்திரன்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். முதலில் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் சில கமிட்மெண்ட்களால் விலகிய நிலையில் கட்சிசேர ஆல்பம் பாடல் புகழ் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.
மேயாத மான், ஆடை படங்களின் இயக்குநர் ரத்னகுமார், ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
