அற்புத படைப்பு.. மரண மொக்கை.. கலந்து அடிக்கும் ரெட்ரோ ட்விட்டர் ரிவ்யூ.. என்ன சொல்கிறார்கள் சூர்யா ஃபேன்ஸ்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அற்புத படைப்பு.. மரண மொக்கை.. கலந்து அடிக்கும் ரெட்ரோ ட்விட்டர் ரிவ்யூ.. என்ன சொல்கிறார்கள் சூர்யா ஃபேன்ஸ்?

அற்புத படைப்பு.. மரண மொக்கை.. கலந்து அடிக்கும் ரெட்ரோ ட்விட்டர் ரிவ்யூ.. என்ன சொல்கிறார்கள் சூர்யா ஃபேன்ஸ்?

Malavica Natarajan HT Tamil
Published May 01, 2025 10:19 AM IST

நடிகர் சூர்யா மற்றும் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் இன்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் இதோ.

அற்புத படைப்பு.. மரண மொக்கை.. கலந்து அடிக்கும் ரெட்ரோ ட்விட்டர் ரிவ்யூ.. என்ன சொல்கிறார்கள் சூர்யா ஃபேன்ஸ்?
அற்புத படைப்பு.. மரண மொக்கை.. கலந்து அடிக்கும் ரெட்ரோ ட்விட்டர் ரிவ்யூ.. என்ன சொல்கிறார்கள் சூர்யா ஃபேன்ஸ்?

ட்விட்டர் விமர்சனம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், தலைப்புக்கு ஏற்றாற்போல் மூன்று வெவ்வேறு லுக்கில் சூர்யா தோன்றியுள்ளார். டிரைலர் மூலம் எதிர்பார்ப்பை அதிகரித்த இப்படம், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா? படத்தைப் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை ட்விட்டர் விமர்சனங்கள் மூலம் பார்க்கலாம்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் சமீப காலமாக திரையரங்குகளில் பெரிய அளவில் ஹிட் அடையவில்லை. கோடிகளில் செலவழித்து உருவான படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. இதற்கு சமீபத்திய உதாரணம் 'கங்குவா' திரைப்படம். ஆனால், சூர்யாவின் ரசிகர் கூட்டம் குறையவே இல்லை. இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரது படங்களைப் பார்க்க காத்திருக்கிறார்கள். இப்போது, அதே ரசிகர்களுக்காக 'ரெட்ரோ' மூலம் மீண்டும் திரையரங்குகளுக்கு வந்துள்ளார்.

ப்ரீமியர் ஷோ இல்லை

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 'ரெட்ரோ' படத்திற்கு எங்கும் பிரீமியர் ஷோக்கள் நடத்தப்படவில்லை. முன்னதாக 'கங்குவா' படத்தின் பிரீமியர் ஷோ முடிந்ததும், படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. இப்போது 'ரெட்ரோ' படத்திற்கும் அப்படி ஒரு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக அந்த முயற்சியில் படக்குழு ஈடுபடவில்லை என்று தெரிகிறது. இப்போது திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது, சமூக வலைத்தளங்களில் படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன. விரைவில் படத்தின் விமர்சனங்கள் வெளியாகும்.

ரேம்ப் டைட்டில் கார்டு

ரெட்ரோ படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு வந்துள்ள ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ரெட்ரோ டைட்டில் கார்டு திரையிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் ரசித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆரம்பத்திலேயே ரசிகர்களை இந்த டைட்டில் கார்டு எனர்ஜி ஆக்கியதால் ரசிகர்கள் படத்திற்குள் ஆர்வமாக நுழைந்துள்ளனர்.

ஒரே பாசிட்டிவ் பூஜா ஹெக்டே தான்

ரெட்ரோ படத்தினை அமெரிக்காவில் பார்த்த ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இது சூர்யா நடித்த மற்றொரு டிசாஸ்டர் படம். மரண மொக்கையாக உள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே மட்டும் தான் பாசிட்டிவ்வாக தெரிகிறார். மற்ற அனைவரும் எதற்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார்.

அத்துடன், படத்தின் ஸ்கிரீன் பிளே மிகவும் மோசமாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும், அல்லது படத்தில் நகைச்சுவை காட்சிகளை ஆங்காங்கே வைத்திருக்க வேண்டும். ஆனால், இரண்டும் கலந்து வருவதால் படம் எங்கே சீரியஸாக இருக்க வேண்டும், எங்கே நகைச்சுவையாக இருக்கிறது எனத் தெரியாமல் ரசிகர்கள் போராடுகிறார்கள். இதன் விளைவு படத்தை பார்ப்பவர்களுக்கு வேதனையாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

அற்புதமான படைப்பு

மற்றொரு நபர் இந்த ரெட்ரோ படம் கார்த்திக் சுப்பராஜின் அற்புதமான படைப்பு எனக் கூறியுள்ளார். இது ஒரு கேங்ஸ்டர், தனது மனைவி மீதான காதலுக்கும் தனது கடந்த கால வாழ்க்கைக்கும் இடையில் சிக்கி, ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க முயற்சிக்கும் கதையாக உள்ளது.

வலுவான உணர்ச்சிகள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் சூர்யா அசத்தி இருக்கிறார். இதனால் தியேட்டரே அதிருகிறது. இந்தப் படத்திற்கு 5 க்கு 3.8 மதிப்பெண் தரலாம் என்றார்.

ரெட்ரோ படம்

இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவுடன் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், ஸ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு, ஷாஃபிக் மஹம்மத் அலி படத்தொகுப்பு செய்துள்ளார். இதோ படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்..