ரெட்ரோ விமர்சனம்: ‘புண்ணுக்கு மருந்தா.. பார்வைக்கு விருந்தா?’ சூர்யாவுக்கு ‘கம் பேக்’ தருமா ரெட்ரோ?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரெட்ரோ விமர்சனம்: ‘புண்ணுக்கு மருந்தா.. பார்வைக்கு விருந்தா?’ சூர்யாவுக்கு ‘கம் பேக்’ தருமா ரெட்ரோ?

ரெட்ரோ விமர்சனம்: ‘புண்ணுக்கு மருந்தா.. பார்வைக்கு விருந்தா?’ சூர்யாவுக்கு ‘கம் பேக்’ தருமா ரெட்ரோ?

Kalyani Pandiyan S HT Tamil
Published May 01, 2025 11:42 AM IST

‘இரண்டாம் பாதியில் வசனங்களின் வழியாக காட்சிகளை கடத்திய பல இடங்கள் சோர்வை தருகின்றன. அது படத்தின் பெரும் பலவீனாக மாறி விட்டது’

ரெட்ரோ விமர்சனம்: ‘புண்ணுக்கு மருந்தா.. பார்வைக்கு விருந்தா?’ சூர்யாவுக்கு ‘கம் பேக்’ தருமா ரெட்ரோ?
ரெட்ரோ விமர்சனம்: ‘புண்ணுக்கு மருந்தா.. பார்வைக்கு விருந்தா?’ சூர்யாவுக்கு ‘கம் பேக்’ தருமா ரெட்ரோ?

கதைக்களம் என்ன?

சந்தியாவின் கருணையால் அனாதையாக விடப்பட்ட பாரி சந்தியாவின் கணவர் திலகரிடம் மகனாக தஞ்சம் அடையும் நிலை ஏற்படுகிறது. பாரி திலகரை அப்பாவாக பார்த்தாலும், திலகர் பாரியை தன்னைப் பாதுக்காக்கும் இரும்புக்கை அடியாளாகவே பார்க்கிறான்.

கோபம், அடிதடி, சண்டை என ரணகளமாக செல்லும் பாரியின் வாழ்க்கையில் கண்ணாடிப்பூவாக வருகிறது ருக்மணியின் வரவு. ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்ய முடிவெடுக்கும் பாரி அடிதடியை விடுத்து அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப முடிவெடுக்கிறான்.

இந்த முடிவின் ஒரு பகுதியாக ஜோஜூவின் சரக்கு ஒன்றையும் கைவசப்படுத்திக்கொள்கிறான். அங்கே ஆரம்பிக்கிறது அப்பா - மகன் மோதல். அந்த மோதல் பாரியை அந்தமான் வரை அழைத்துச் செல்கிறது. அந்த மோதலின் முடிவு என்ன? ருக்மணியை பாரி கைப்பிடித்தானா? சரக்கு யார் வசம் சேர்ந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் ரெட்ரோ படத்தின் கதை!

வழக்கத்திற்கு மாறாக சூர்யா

நடை, உடை, பாவனை, ஸ்டைல் என அனைத்திலும் புதிய சூர்யாவை பார்க்க முடிந்தது. கோபத்தின் உக்கிரத்திலும், காதலில் கரையும் இடங்களிலும் சூர்யாவின் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு வழக்கம்போல் சிறப்பு. ருக்மணியாக பூஜா ஹெக்டே, படத்தில் அவர் நடிப்பதற்கு நல்ல ஸ்பேஸ்.. முடிந்த அளவுக்கு அதனை பயன்படுத்தி இருக்கிறார்.

வில்லனாக ஜோஜூ ஒரு பக்கம் மிரட்டினாலும், அவரை விட ஸ்கோர் செய்து வில்லனிசத்தில் மிரட்டுவது விதுதான். இதர கதாபாத்திரங்களில் இடம் பெற்றிருக்கும் வித்தியாசத்தன்மை சுவாரசியமாக இருந்தாலும், படத்தில் அவர்களுக்கான ஸ்பேஸ் மிகவும் கம்மி!

பார்த்திராத களம்.. பார்க்காத மனிதர்கள் என கதையில் புதுமை காட்டி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஒவ்வொரு டிசைனில் அவர் காட்சிப் படுத்தி இருந்த விதம் ஸ்கிரீனில் பார்ப்பதற்கு பல இடங்களில் காமெடியாகவும், சில இடங்களில் சுவாரசியமாகவும் இருந்தது.

காதல், சிரிப்பு, போர், தம்மம் என 4 பாகங்களாக பிரித்து கதை சொன்ன கார்த்திக் சுப்புராஜ் அதற்கு ஏற்றவாறு காட்சிகளை அடுக்கி இருக்கிறார். முதல் பாதி காதலும் சிரிப்புமாக கடக்க, இரண்டாம் பாதி போரும், தம்மமுமாக நகர்கிறது.

முதல் பாதியில் இருந்த அழுத்தமும், சுவாரசியமும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். குறிப்பாக போருக்கு காரணமான கதை சொல்லல் பகுதி ஆடியன்சோடு கனெக்ட் ஆகாமல் போனது படத்தின் பெரும் பலவீனம். அதனால் இரண்டாம் பாதி முழுக்கவே கடும் அயர்ச்சி.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், சந்தோஷ் பின்னணி இசையுமே படத்தை கைப்பிடித்து கரை சேர்த்து இருக்கிறது. கதையில் புதுமையை புகுத்த வேண்டும் என்று மெனக்கெட்ட கார்த்திக், இரண்டாம் பாதி திரைக்கதையில் நம்பகத்தன்மையை சேர்க்க இன்னும் உழைத்திருந்தால் ரெட்ரோ மிரட்டி இருக்கும்மீண்டு வாருங்கள் சூர்யா!