உருவகேலியான கேள்வி.. ஆங்கர் பாணியிலேயே தரமான பதிலடி.. விஜய் பாணியில் குட்டிக்கதை சொல்லி அப்ளாஸும் அள்ளிய அட்லீ
உருவகேலியான கேள்வி.. ஆங்கர் பாணியிலேயே தரமான பதிலடி.. விஜய் பாணியில் குட்டிக்கதை சொல்லி அப்ளாஸும் அள்ளிய அட்லீயின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
உருவகேலியான கேள்வி.. ஆங்கர் பாணியிலேயே தரமான பதிலடி.. விஜய் பாணியில் குட்டிக்கதை சொல்லி அப்ளாஸ் வாங்கிய அட்லீயின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் மிகக்குறைந்த வயதிலேயே இயக்குநர் ஆனவர்களில் முக்கியமானவர், அட்லீ. ஷார்ட் ஃபிலிம் மூலம் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மனதைக் கவர்ந்து அவரின் உதவி இயக்குநராக ஆனவர், அட்லீ குமார். எந்திரன், நண்பன் ஆகியப் படங்களில் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநாகப் பணிபுரிந்தார்.
அதன்பின், ராஜா ராணி என்னும் படத்தை எடுத்தார். அப்படம் மெளனராகம் என்னும் மணிரத்தினம் படத்தின் மறு உருவாக்கம் போல் இருந்தது என சர்ச்சைகள் எழுந்தன. அதன்பின், தெறி என்னும் படத்தை இயக்கியிருந்தார், அட்லீ. அப்படமும் சத்ரியன் படத்தின் சாயலில் இருந்தாக விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் இந்த இரண்டு படங்களும் வசூலில் குறையவில்லை. அதன்பின், மெர்சல், பிகில் என இவர் இயக்கிய படங்கள் ஹிட்டடித்தன. இருப்பினும், அவரது படத்தில் வரும் காட்சிகளை மற்ற படங்களுடன் ஒப்பிட்டு, நெட்டிசன்கள் எழுதுவதைத் தவிர்க்கவில்லை.
அட்லீயின் ஜவான் பயணம்:
இந்நிலையில் ஷாருக்கானுடன் ஐபிஎல் பார்க்க சென்ற இயக்குநர் அட்லீயைப் பலரும் காப்பி மன்னன் என்றும், ஷாருக்கான் அருகில் நிற்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது; அவரை வைத்து படத்தை இயக்கமுடியுமா என்று பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். அப்போது அவற்றுக்குப் பதிலாக, நடிகர் ஷாருக்கானும் இயக்குநர் அட்லீயும் ‘ ஜவான்’ படத்தில் இணைவதாக அறிவிப்பு வெளியானது.
அதைத்தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடித்து 2023ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் ஜவான். அப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகி ரூ.1000 கோடி வசூல் சாதனை செய்தது. இதன் மூலம் இந்தியாவின் முக்கிய இயக்குநராக மாறினார், அட்லீ.
அதனைத்தொடர்ந்து பாலிவுட் நடிகர் வருண் தவானை வைத்து பேபி ஜான் என்னும் படத்தைத் தயாரித்து வந்தார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பின்போது இரும்புக்கம்பியில் மோதி வருண் தவான் விபத்தில் சிக்கிய படங்கள் எல்லாம் இணையத்தை ஆக்கிரமித்தன. இப்படம் தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான தெறி படத்தின் ரீமேக்காகும். மேலும் இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆடி வெளியான ‘நையின் மடக்கா’ என்னும் வைரல் ஆகியது. இப்பாட்டில் தன் வழக்கமான பீட்டுகளை இசையாகப் பொழிந்து இருக்கிறார், இசையமைப்பாளர் எஸ். தமன்.
கபில் சர்மாவை வைச்சு செய்த அட்லீ:
இந்நிலையில் படத்தின் புரொமோஷனுக்காக அட்லீ மற்றும் படக்குழுவினர் தீவிரமாக மும்பையில் இயங்கிவருகின்றனர். அதில் முக்கியமாக சமீபத்தில் தி கிரேட் இந்தியன் கபில் சர்மா ஷோவில் படக்குழு கலந்துகொண்டது. அதில் தொகுப்பாளர் கபில் சர்மா, ‘உங்களது ஆரம்ப நாட்களில் சினிமாவில் எப்படி பார்த்தார்கள்’ என உருவகேலி செய்யும் வகையில் கேட்டார்.
உடனே சுதாரித்துக்கொண்ட அட்லீ, ‘நீங்கள் என்னகேட்கிறீர்கள் என்று புரிகிறது. என்னுடைய முதல் தயாரிப்பாளர் ஏ.ஆர். முருகதாஸ் சார் தான். அவருக்கு எனது கதை பிடித்திருந்தது. எனது உருவத்தைப் பார்க்காமல் இதயத்தைப் பார்த்தார்’ என பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து, அட்லீ சொன்ன குட்டிக்கதையில் கூறியிருப்பதாவது, ‘’ஒரு பணக்காரர் குளிரில் நடந்து சென்ற ஏழையிடம் எனது வீட்டுக்குச் சென்று, ஒரு போர்வையை எடுத்துக்கொண்டு தருவதாகச் சொல்லிவிட்டுச் செல்கிறார். வீட்டுக்குச் சென்றதும், அந்த பணக்காரர் ஏழையை மறந்துவிட்டார்.
மறுநாள் பணக்காரருக்கு தான் கொடுத்த உறுதி நினைவுக்கு வர ஏழையைச் சென்று பார்க்கையில் அவர் மரித்திருக்கிறார். இதில் இரண்டு நீதிகள் உள்ளன. யாருக்கும் வாக்குறுதி கொடுக்கக்கூடாது. இன்னொன்று நம் வாழ்வில் சம்மந்தமே இல்லாத நபரை எல்லாம் நம்பி இருந்துவிடக்கூடாது''என சொல்லிமுடித்ததும் அனைவரும் கைதட்ட ஆரம்பித்துவிட்டனர். இப்படி அட்லீ தனக்கு எதிரான எந்தவொரு சூழலையும் தனக்கு சாதகமாக மாற்றி கைதட்டு பெற்றுவிட்டதாக, நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
டாபிக்ஸ்