தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Reputed Film Critic, Movie Tracker Kaushik Lm Passed Away Due To Cardiac Arrest

பிரபல சினிமா செய்தியாளர் கெளசிக் மாரடைப்பால் உயிரிழப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 16, 2022 09:47 AM IST

பிரபல சினிமா விமர்சகர், செய்தியாளர் யூடியூப்பர், சினிமா பாக்ஸ் ஆபிஸ் டிரக்கரான கெளசிக் எல்எம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சினிமா செய்தியாளர், யூடியூப்பர் கெளசிக் எல்எம் மாரடைப்பால் மரணம்
சினிமா செய்தியாளர், யூடியூப்பர் கெளசிக் எல்எம் மாரடைப்பால் மரணம்

ட்ரெண்டிங் செய்திகள்

சினிமா நடிகர், நடிகைகள் பலருக்கும் நெருக்கமானவராக இருந்து வந்த இவர் சினிமா தொடர்பான அனைத்து தகவல்கள் ட்ராக் செய்து தெளிவாக டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்கில் அப்டேட் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளராகவும் இருந்து வந்த கெளசிக் பல்வேறு திரைப்படங்களுக்கு விமர்சனமும் எழுதியுள்ளார். கடைசியாக இவரது டுவிட்டர் போஸ்டில் சீதா ராமம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பகிர்வந்திருந்தார். அத்துடன் விருமன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை எடுத்துக்கூறி பின் செய்திருந்தார்.

இளம் வயதான கெளசிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். கெளசிக்கின் திடீர் மறைவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ், பிரியா ஆனந்த், இயக்குநர் வெங்கட் பிரபு உள்பட சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

WhatsApp channel