Anirudh Ravichandar: கோடிகளில் புரளும் அனிருத்.. 33 வயசில் இப்படி ஒரு சாதனை.. எல்லாருமே அனிருத் பின்னாடி தான்..
Anirudh Ravichandar: வெறும் 33 வயதில் இந்தியாவின் அத்தனை இசைக் கலைஞர்களையும் பின்னுக்குத் தள்ளி அதிகம் சம்பளம் வாங்கும் நபராக மாறி இருக்கிறார் அனிருத் ரவிச்சந்தர்.

Anirudh Ravichandar: பல ஆண்டுகளாக, ஏ.ஆர். ரஹ்மான் நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். அவரது ஆல்பங்கள் அடிக்கடி சார்ட்பஸ்டர்களாக இருந்து வருகின்றன, இதனால் அவர் ஒரு படத்திற்கு கோடிகளைக் கட்டணமாக வசூலிக்க முடிகிறது.
33 வயது இளைஞரின் சாதனை
இருப்பினும், 2023 இல், ஒரு இளம் வளர்ந்து வரும் நட்சத்திரம் ஒரே படத்திற்கு ஒன்பது இலக்கங்களை வசூலித்து, இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் இசைக்கலைஞராக மாறி ஏ.ஆர். ரஹ்மானை மிகவும் பின்னுக்கு தள்ளினார். மேலும் இவை அனைத்தையும் 33 வயதில் செய்தது தான் இங்கே விஷயமே.
அதிக சம்பளம் வாங்கும் இசைக்கலைஞர்
தன்னுடைய முதல் படத்திலே தான் இசையமைத்த ஒரு பாடலால் உலகம் முழுக்க பிரபலமானவர் தான் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். ஒய் திஸ் கொலவெறி பாடல் தான் முதன்முதலில் பல யூடியூப் சாதனைகளை செய்து கோலிவுட் பாடலை உலகறியச் செய்தது.
பின், ஜெயிலர், பேட்ட, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற தமிழ் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் பெயர் பெற்ற உச்ச நட்சத்திர இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் மாறினார். அதன் விளைவாக, அதிக சம்பளம் வாங்கும் இசைக்கலைஞராகவும் அவர் இருந்தார்.
பாலிவுட்டில் அறிமுகம்
2023 ஆம் ஆண்டில், ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திற்கான இசையமைப்பின் மூலம் அனிருத் பாலிவுட்டில் அறிமுகமானார். இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான் வழக்கமான ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 7 கோடி முதல் 8 கோடி வரை சம்பளமாக பெறுவார் எனவும், ஆனால் அனிருத் ஒரு படத்திற்கு ரூ. 10 கோடியை சம்பளமாக வசூலித்ததாகவும் நியூஸ் 18 தெரிவித்தது.
அடுத்தடுத்த படங்களில் குறைவான சம்பவம்
இருப்பினும் அனிருத் தனது அடுத்தடுத்த படங்களுக்கான சம்பளத்தை குறைத்தார் எனவும் செய்தி வெளியானது. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின் படி, லியோ மற்றும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் தலாரூ. ₹8 கோடி சம்பளமாக பெற்றார் எனத் தெரிவித்தது. இருப்பினும் கூட, அவர் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராகவே உள்ளார்.
இது எப்படி நடந்தது?
அனிருத் தமிழ் சினிமா இசைக்கு ஒரு புதிய ஒலியைக் கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இசையமைப்பாளர் டெக்னோ இசையுடன் பரிசோதனை செய்து, நடிகர்களின் நிஜ வாழ்க்கை ஆளுமைகளை அவர்களின் கதாபாத்திரங்களுக்கான பின்னணி இசைக்காக ஒருங்கிணைப்பதில் கில்லாடி என அறியப்படுகிறார்.
மாஸ் ஹீரோக்களின் அடையாளம்
இது ரஜினிகாந்த் (பேட்டா மற்றும் ஜெயிலரில்), கமல்ஹாசன் (விக்ரமில்), விஜய் (மாஸ்டர் மற்றும் லியோவில்) மற்றும் ஷாருக்கான் (ஜவானில்) போன்ற பெரிய நட்சத்திரங்களுக்கு இசையமைக்க உதவியது. அவர் ஷாருக்கான், ரஜினி மற்றும் விஜய் போன்ற பல நட்சத்திரங்களின் படங்களில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டார்.
அவரது சில பாடல்கள் நட்சத்திரங்களுக்கான மாஸ் என்ட்ரியாக மாறியுள்ளது. குறிப்பாக ஜெயிலரின் ஹுக்கும். இந்தப் பாடல் இசைத் துறையில் அவரது அந்தஸ்தை உயர்த்தியுள்ளது. இசையின் வெற்றி இசைக் கலைஞர் தனது கட்டணத்தை உயர்த்த வழிவகுத்தது. இதன் காரணமாக அனிருத் 33 வயதில் ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி வசூலிக்க காரணமாக அமைந்தது.
மற்ற கலைஞர்களின் சம்பளம்
பிரிதம், விஷால்-ஷேகர், எம்.எம். கீரவாணி மற்றும் யுவன் சங்கர் ராஜா போன்ற மற்ற இந்திய இசையமைப்பாளர்கள் அனைவரும் ஒரு படத்திற்கு ரூ.5 கோடிக்கு கீழ் தான் சம்பளமாக பெறுகின்றனர். பாடகர்களுக்கு இந்தத் தொகை இன்னும் குறைவு. அவர்கள் ஒரு பாடலுக்கு ரூ. 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பளமாக பெறுகின்றனர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்