Vetrimaaran: விஜயின் தவெக 2ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பங்கேற்றது ஏன்? - தகவல்கள் இங்கே!
Vetrimaaran: யாரும் எதிர்பாராத விதமாக, மதுரை அழகர் கோவில், மாத்தூர் விளக்கில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார்.

Vetrimaaran: நடிகர் விஜய் தனது கட்சியான ‘தமிழக வெற்றி கழகம்’ பெயரை கடந்த வருடம் பிப்ரவரி 2ஆம் தேதி டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். நேற்றைய தினம் அவர் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அதனை கொண்டாடும் விதமாக பல்வேறு இடங்களில் அவரது தொண்டர்கள் சார்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, மதுரை அழகர் கோவில், மாத்தூர் விளக்கில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். இது பற்றி பல்வேறு விதமாக செய்திகள் வெளியான நிலையில், அவர் கலந்து கொண்டதின் பின்னணி சார்ந்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வெற்றிமாறன் தற்போது சூர்யாவை வைத்து இயக்கும் ‘வாடிவாசல்’ படத்திற்கான வேலைகளில் மும்மரமாக இருக்கிறார். இந்த படமானது ஜல்லிக்கட்டு மையப்படுத்தி எழுதப்பட்ட சி சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி உருவாக்கப்பட இருக்கிறது. இதற்கிடையே, நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்ற இயக்குநர் அருணின் கல்யாணத்திற்கு செல்வதற்காக அவர் அங்கு வந்திருக்கிறார்.
தமிழக வெற்றிக்கழக விழா
இந்த சமயத்தில் தான் மதுரை வடபகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் விதமாக மாட்டுவண்டி பந்தயத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வெற்றிமாறன் அங்கு இருப்பதை அறிந்த அவர்கள், வெற்றிமாறனை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைத்திருக்கிறார்கள்.
வாடிவாசல் படத்திற்காக மாடுகளை ஆராய்ச்சி செய்து வரும் வெற்றிமாறன் மாடுகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக அங்கு சென்று இருக்கிறார். ஆனால் கிளம்பும் முன்னரே, மாடுகள் சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்திலேயே வருகிறேன் என்று வெற்றிமாறன் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மொத்தம் மூன்று ரவுண்டுகளாக போட்டி நடந்திருக்கிறது. இரண்டு ரவுண்டுகளை மிக ஆர்வமாக கூர்மையாக கவனித்து பார்த்துவிட்டு வெற்றி மாறன் கிளம்பி இருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்