Vidaamuyarchi: ‘வானத்தையே கிழிச்சிட்டு எவன் குதிச்சாலும்’ -முன்பதிவில் விடாமுயற்சி படம் வசூல் செய்த ரூபாய் எவ்வளவு?
Vidaamuyarchi: எல்லா திரையரங்குகளிலும் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து, ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக மாறியிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Vidaamuyarchi: அஜித் நடிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் இந்தப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாக இருக்கிறது. ‘துணிவு’ படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளியில் இந்தத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.
தள்ளிப்போன ரிலீஸ்
முன்னதாக, பொங்கல் பண்டிகையையொட்டி திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படம் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப்போனது. விடாமுயற்சி திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் விறுவிறுவென நடந்து வருகிறது. கிட்டத்தட்ட எல்லா திரையரங்குகளிலும் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து, ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக மாறியிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இது தொடர்பான தகவல்களை டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் வெளியிட்டு இருக்கிறது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் விடாமுயற்சி திரைப்படம் 6 கோடி ரூபாய் அளவில் முன் பதிவு டிக்கெட்டுகளை விற்று இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது. சினி உலகம் இணையதளம் வெளியிட்ட தகவலில் வெளிநாடுகளில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு பெரிய வரவேற்பு இருப்பதாவும், அங்கு 4 கோடி ரூபாய் அளவில் முன்பதிவு நடைபெற்று இருப்பதாகவும், மொத்த முன் பதிவை பொறுத்தவரை, 3 நாட்களில் 10 கோடி அளவில் முன்பதிவு நடந்து இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது. இப்படியே சென்றால் முன்பதிவு கிட்டத்தட்ட 20 கோடி வரை செல்லலாம் என்று திரைவட்டாரம் கூறுகிறது.
விடாமுயற்சி படம்
நடிகர் அஜித் குமார்- திரிஷா கூட்டணியில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. ஆங்கிலத்தில் வெளியான பிரேக் டவுன் படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த தேதியில் இருந்து பின்வாங்கியது. அதன் பின்னர் இந்த திரைப்படம் பிப்ரவரி 6 ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. பிரேக் டவுன் படக்குழுவுடன் ஏற்பட்ட பணப்பிரச்சினை காரணமாகவே படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்றும் அதன் பின்னர் ஏற்பட்ட சமரச பேச்சுவார்த்தையின் காரணமாக விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதிக்கு ரிலீஸ் ஆவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தின் தமிழ்நாட்டின் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று இருக்கிறது. விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்று இருக்கும் நிலையில், ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்று இருக்கிறது. ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கி இருக்கிறது. விடாமுயற்சி படத்திற்கு சென்சார் யூ/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கும் நிலையில், இந்தப்படம் 2 மணி நேரம் 30 நிமிடம் 46 நொடிகள் ஓடக்கூடியதாக வந்திருக்கிறது.
முன்னதாக பட ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து மகிழ்திருமேனி பேசும் போது , ‘ மகிழ் திருமேனிக்கும், அஜித்திற்கும் இடையே சண்டை; அதனால்தான் படம் தாமதம் ஆகிறது உள்ளிட்ட வதந்திகளுக்கு அஜித் மகிழ்திருமேனியிடம் அஜித் ஒரு விஷயம் சொன்னார். அது என்னவென்றால், படம் மட்டும் ஹிட் அடித்து விட்டால், இதையெல்லாம் பற்றியெல்லாம் யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள்; ரசிகர்கள் உன்னை பாராட்டுவார்கள்; ஆகையால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், நீ உன்னுடைய வேலையை மட்டும் சிறப்பாக செய். படத்தை முடித்து மக்களிடம் கொடு; அதன் பின்னர் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று கூறியிருக்கிறார்.’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்