‘பீஸ்ட்’ ‘குட் பேட் அக்லி’ பிரபலம் ஷைன் டாம் சாக்கோ சென்ற கார் விபத்து! - சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தந்தை!
ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவரது தாய், சகோதரர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் கார் விபத்தில் காயமடைந்தனர்.

தமிழில் விஜயின் பீஸ்ட், அஜித்குமாரின் குட் பேட் அக்லி, கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவரது தந்தை சி.பி.சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஷைன் டாம் சாக்கோ தன்னுடைய குடும்பத்தினருடன் காரில் பெங்களூர் சென்று கொண்டிருந்தார். தர்மபுரி பாலக்கோட்டை அருகே காலை 7 மணியளவில் சென்று கொண்டிருக்கும் போது காரானது விபத்துக்குள்ளானது. நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, இவர்களின் காரானது அவர்களுக்கு முன்னால் ஒரு லாரி மீது மோதியதாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சி.பி.சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த நடிகர்
மேலும் கார் ஓட்டுநர், ஷைன் டாம் சாக்கோ, அவரது தாய், சகோதரர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாலக்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.