படம் ப்ளாக்பஸ்டர் ஆகுமா? - எல்.ஐ.கே படத்தின் ஒன்லைன் இதுவா?.. ஐஎம்டிபி கொடுத்த தகவல்.. குஷியில் ரசிகர்கள்!
திரைத்துறையிலும் ஒன்றாக சேர்ந்து உழைத்து வரும் இந்த ஜோடி, ரெளடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் வழியாக படங்களையும் தயாரித்து வருகிறது. தற்போது ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும், 7 ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனமும் இணைந்து ‘லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தை தயாரித்து வருகிறது.

கோலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோர் வலம் வருகிறார்கள். சினிமாவில் மட்டுமல்லாது, பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்து வரும் இந்த ஜோடி, நாப்கின், பெட்ரோல், டீக்கடை, அழகுசாதன பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்துள்ளனர்.
திரைத்துறையிலும் ஒன்றாக சேர்ந்து உழைத்து வரும் இந்த ஜோடி, ரெளடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் வழியாக படங்களையும் தயாரித்து வருகிறது. தற்போது ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும், 7 ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனமும் இணைந்து ‘லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தை தயாரித்து வருகிறது.
தந்தையாக சீமான்
இந்தப்படத்தில் பிரதீப் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில், கீர்த்தி செட்டி, சீமான் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் படத்தை டைரக்ட் செய்து வருகிறார். சீமான் பிரதீப்பின் தந்தையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தப்படம் மே மாதம் 16ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது (அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வில்லை). இந்த நிலையில் இந்தப்படத்தின் ஒன்லைன் தொடர்பாக ஐஎம்டிபி தளம் தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
படத்தின் கதை என்ன?
அந்தத்தகவலில், இந்தப்படம் தனது காதலுக்காக ஹீரோ மொபைல் வாயிலாக டைம் ட்ராவல் செய்து 2035ம் ஆண்டை அடைகிறான் என்று குறிப்பிட்டு இருக்கிறது. அவன் ஏன் டைம் ட்ராவல் செய்கிறான், அங்கு என்ன நடந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள் கதையாக விரியும் என்று தெரிகிறது. இதனைப்பார்த்த ரசிகர்கள்.. நல்லாத்தானே இருக்கிறது என்ற ரீதியில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றன.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
