‘இந்தியன் 2வும் ஓடல.. அப்புறம் தக் லைஃப் எப்படி..? அவருக்கு அப்படியான ரசிகர்களே கிடையாது’ - கமல் குறித்து விநியோகஸ்தர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘இந்தியன் 2வும் ஓடல.. அப்புறம் தக் லைஃப் எப்படி..? அவருக்கு அப்படியான ரசிகர்களே கிடையாது’ - கமல் குறித்து விநியோகஸ்தர்!

‘இந்தியன் 2வும் ஓடல.. அப்புறம் தக் லைஃப் எப்படி..? அவருக்கு அப்படியான ரசிகர்களே கிடையாது’ - கமல் குறித்து விநியோகஸ்தர்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 19, 2025 12:18 PM IST

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட உச்ச நீதிமன்றம் வழி வகுத்த ஒரு நாள் கழித்து, மாநிலத்தில் உள்ள படத்தின் விநியோகஸ்தர் இந்த பிரச்சினை இப்போது விவாதத்திற்குரியது என்று கூறினார்.

‘இந்தியன் 2வும் ஓடல.. அப்புறம் தக் லைஃப் எப்படி..? அவருக்கு அப்படியான ரசிகர்களே கிடையாது’ - கமல் குறித்து விநியோகஸ்தர்!
‘இந்தியன் 2வும் ஓடல.. அப்புறம் தக் லைஃப் எப்படி..? அவருக்கு அப்படியான ரசிகர்களே கிடையாது’ - கமல் குறித்து விநியோகஸ்தர்!

கடைசி வரை மன்னிப்புக் கேட்கவில்லை

கமல்ஹாசன் நடித்து, மணி ரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த ஜூன் 5 அன்று வெளியானது. இதற்கிடையே நடந்த அந்தப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில், கமல் கன்னட மொழி குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்காக அவர் மன்னிப்புக்கேட்க வற்புறுத்தப்பட்டார்.

ஆனால், அவர் மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். இந்த நிலையில் கர்நாடகா வர்த்தக சபை கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியிட தடை விதித்தது. இதனை எதிர்த்து கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார்.

அங்கும் அவர் மன்னிப்புக்கேட்க வற்புறுத்தப்பட்டார். ஆனால், அதன்பின்னரும் கமல்ஹாசன் மன்னிப்புக்கேட்கவில்லை. இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாக வில்லை.

பொதுநல மனு

இந்தத்தடையை எதிர்த்து மகேஷ் ரெட்டி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் போலீஸ் பாதுகாப்புடன் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட உத்தரவிட்டது. இந்த நிலையில் இது குறித்து விநியோகஸ்தகர் வெங்கடேஷ் கமலாகரின் சில கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் போது, ‘கமலாகர் கூறுகையில், ‘கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் கூறியது கன்னடர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதால், படத்தை வெளியிடுவதில் அர்த்தமில்லை. ஆனால், படத்தை இப்போது ரிலீஸ் செய்வது நல்ல வியாபார முடிவு அல்ல.

இந்தியன் 2 ஓடவில்லை

அவரது முந்தைய படமான இந்தியன் 2 கர்நாடகாவில் சரியாக ஓடவில்லை. 2022 ஆம் ஆண்டில் கமல்ஹாசனின் விக்ரம் கர்நாடகாவில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அவருக்கு அவரது படத்தைக் கண்மூடித்தனமாக பார்க்கும் ரசிகர் பட்டாளம் இங்கே கிடையாது.

அவரது படங்களின் வெற்றி என்பது அவரது படம் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை பொறுத்தே அமைகிறது. தக் லைஃப் மோசமான விமர்சனங்களைப் பெற்று இருக்கிறது. அதனால், இந்தப்படம் மிகவும் சிக்கலானது’ என்று பேசினார்.