தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rekha Nair: ‘யார்கூடயும் தப்பு பண்ணல; ஆம்புலன்சில் போய்கிட்டு இருக்கும் போதே குழந்தை பொறந்து’ - ரேகா நாயர்

Rekha Nair: ‘யார்கூடயும் தப்பு பண்ணல; ஆம்புலன்சில் போய்கிட்டு இருக்கும் போதே குழந்தை பொறந்து’ - ரேகா நாயர்

Kalyani Pandiyan S HT Tamil
May 28, 2024 09:23 AM IST

Rekha Nair: சென்னைக்கு வந்த புதிதில், நான் 7 சேனல்களில் வேலை பார்த்து இருக்கிறேன். அப்போது எனக்கு ஒரு சேனலில் 300 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். நான் முதலில் விடுதியில் தங்கி, பின்னர் வாடகை வீடு எடுத்து, படிப்படியாகதான் முன்னேறியிருக்கிறேன். - ரேகா நாயர்

Rekha Nair: ‘யார்கூடயும் தப்பு பண்ணல; ஆம்புலன்சில் போய்கிட்டு இருக்கும் போதே குழந்தை பொறந்து’ - ரேகா நாயர்
Rekha Nair: ‘யார்கூடயும் தப்பு பண்ணல; ஆம்புலன்சில் போய்கிட்டு இருக்கும் போதே குழந்தை பொறந்து’ - ரேகா நாயர்

ட்ரெண்டிங் செய்திகள்

பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் 

இது குறித்து அவர் பேசும் போது, “  இன்று பெண்கள் பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அவர்களுக்கு முடி இருந்தாலும் பிரச்சினையாக இருக்கிறது. இல்லை என்றாலும் பிரச்சினையாக இருக்கிறது. காலில் இருந்து அவர்கள் போடுகிற செருப்பு வரை ஒரே பிரச்சினை. இவள் எப்படி இந்த செருப்பு வாங்கி இருப்பாள். இந்த செருப்பு எவ்வளவு விலை இருக்கும்.. இவளால் எப்படி அவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியும் என்று கேட்கிறார்கள். 

சென்னைக்கு வந்த புதிதில், நான் 7 சேனல்களில் வேலை பார்த்து இருக்கிறேன். அப்போது எனக்கு ஒரு சேனலில் 300 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். நான் முதலில் விடுதியில் தங்கி, பின்னர் வாடகை வீடு எடுத்து, படிப்படியாகதான் முன்னேறியிருக்கிறேன். ஆனால் நாம் பட்ட அந்த கஷ்டமெல்லாம் இந்த சமூகத்திற்கு தெரியாது. ஆனாலும், இந்த சமூகம் என்னை வேறு மாதிரிதான் பார்க்கிறது. நாமெல்லாம் அதனை காதில் வாங்க வேண்டிய அவசியமில்லை. காரணம் நான் யாரையும் ஏமாற்றவில்லை. 

யாருடனும் தவறு செய்யவில்லை

யாருடனும் தவறு செய்யவில்லை. யார் குடும்பத்தையும் கெடுக்க வில்லை. எனக்கு என்னுடைய விஷயம் சரியாக இருப்பது போல, இந்த சமூகத்தில் ஒவ்வொருவரும் சரியாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும், இந்த சமூகம் அவர்கள் மீது அவதூறுகளை வீசிக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி பார்க்கும் போது, இந்த சமூகம் யாரையும் விட்டு வைக்க வில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அப்படி இருக்கும் போது, இந்த சமூகம் என்னை விட்டு வைக்கவா போகிறது என்ற எண்ணம் எனக்கு ஆழமாக வந்து விட்டது. 

ஆகையால் யார் என்ன சொன்னாலும், நீங்கள் சாக வேண்டிய அவசியமில்லை. காரணம், இந்த உலகமே ஒரு சாக்கடைதான். ஆகையால் பொதுவெளிக்கு வரும் பெண்கள் விமர்சனங்களை எதிர்கொள்வதற்கான துணிச்சல் இருந்தால் மட்டும் வாருங்கள். இல்லை என்றால், சாதரண பெண்ணாக வாழ்ந்து விட்டு சென்று விடுங்கள். எனக்கு பிரசவ வலி வந்து, ஆம்புலன்சில் அழைத்து சென்றார்கள். 

பாதி வழியில் பிறந்த குழந்தை:

அந்த சமயத்தில் யாரும் என்னுடன் இல்லை. ஆம்புலன்சில் கொண்டு சென்று இருக்கும் போதே பாதி வழியில் எனக்கு குழந்தை பிறந்து விட்டது; அங்கு யாரும் இல்லாத காரணத்தால், நான் எனக்கான வேலைகளை செய்து, மருத்துவமனையை அடைந்தேன். என் மகளுக்கு ஆசைப்பட்டது அனைத்தையும் நான் செய்து கொண்டு இருக்கிறேன். 

நீண்ட நாட்களாக அவள் நடனம் ஆட வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அதற்கு மட்டும் நான் நோ சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவளுக்கு நான் இதுவரை போன் கொடுத்ததே கிடையாது. அவளிடம் நான் அதற்கு ஒரு கண்டிஷன் போட்டு இருக்கிறேன். அது என்னவென்றால், அதில் தேவையில்லாததை பார்க்கக்கூடாது. அப்படியே வந்தாலும், அதை கடந்து போக வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். அதற்கு அவளிடம் முழுமையாக பதில் கிடைக்க வில்லை” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்