Regina Cassandra: ‘ அஜித் சார் பார்க்குறதுக்கு அமைதியா இருப்பார் ஆனா.. அர்ஜூன் ஆக்‌ஷன் சும்மா அப்படி’ - ரெஜினா பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Regina Cassandra: ‘ அஜித் சார் பார்க்குறதுக்கு அமைதியா இருப்பார் ஆனா.. அர்ஜூன் ஆக்‌ஷன் சும்மா அப்படி’ - ரெஜினா பேட்டி!

Regina Cassandra: ‘ அஜித் சார் பார்க்குறதுக்கு அமைதியா இருப்பார் ஆனா.. அர்ஜூன் ஆக்‌ஷன் சும்மா அப்படி’ - ரெஜினா பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 04, 2025 05:56 PM IST

Regina Cassandra: “ ‘விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு. திரையரங்கில் பார்வையாளர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள்- நடிகை ரெஜினா பேட்டி

Regina Cassandra: ‘ அஜித் சார் பார்க்குறதுக்கு அமைதியா இருப்பார் ஆனா.. அர்ஜூன் ஆக்‌ஷன் சும்மா அப்படி’ - ரெஜினா பேட்டி!
Regina Cassandra: ‘ அஜித் சார் பார்க்குறதுக்கு அமைதியா இருப்பார் ஆனா.. அர்ஜூன் ஆக்‌ஷன் சும்மா அப்படி’ - ரெஜினா பேட்டி!

பல லேயர்கள் உண்டு

அவர் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி பேசும்போது, “டிரெய்லர் மட்டுமே வைத்து என்னுடைய கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என யூகிக்க வேண்டாம். என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு. திரையரங்கில் பார்வையாளர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள்” என்றார்.

அஜித்துடன் ரெஜினா
அஜித்துடன் ரெஜினா

மேலும் பேசிய அவர் “இந்தப் படத்தில் வேறொருவி கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் மகிழ் சார் என்னை அழைத்தார். ஆனால், ஒருவாரம் கழித்து இப்போது நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவரது அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது”. என்று பேசினார்.

அஜர்பைஜான் நாட்டின் கிளைமேட் பற்றி கேட்டபோது, “அஜர்பைஜானில் மலை உச்சியில் படப்பிடிப்பு நடத்தியபோது, சரியான நேரத்தில் மலைக்குள் எல்லாம் நடக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். மகிழ் சார் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் சரியாக திட்டமிட்டு அதை முடித்தோம்”. என்றார்.

ஆக்‌ஷன் கிங் எப்படி?

ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுடன் பணிபுரிந்தது பற்றி கேட்டபோது, “படத்தில் மூன்று ஜார்ஜியன் ஸ்டண்ட்ஸ் மேனுடன் ஒரு ஆக்‌ஷன் சீக்வன்ஸ் உண்டு. அதற்கான இன்புட்ஸை படப்பிடிப்புத் தளத்தில் ஸ்டண்ட் மாஸ்டரிடம் கேட்டுவிட்டு ஒரே டேக்கில் அந்த காட்சியை அர்ஜூன் சார் செய்து முடித்தார். அந்த ஸ்டண்ட் மேன்ஸ் அவரது ஆக்‌ஷன் மற்றும் வயதை கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய்விட்டனர்” என்றார்.

ரெஜினா
ரெஜினா

நடிகர் அஜித்துடன் பணிபுரிந்தது பற்றி கேட்டபோது, “அவர் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் செட்டில் பயங்கர எனர்ஜியுடன் இருந்தார். முதல் நாளில் இருந்து படப்பிடிப்பின் கடைசி நாள் வரை நட்புடன் எங்களுடன் பழகினார்” என்றார்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் விடாமல் முயற்சி பண்ணுறது என்றால் எதைச் சொல்வீங்க?

வாழ்க்கையே விடாமுயற்சி தான் பண்ணிட்டு இருக்கேன்(சிரிக்கிறார்). வாழ்க்கையே ஏதாவது ஒரு முயற்சி தானே.

உங்களது கமிட்மென்ட்டுகளோடு வாழ்றது, ஃபேமிலிக்குண்டான கமிட்மென்ட், வேலைக்கு கமிட்மென்ட், ரிலேஷன்ஷிப் கமிட்மென்ட் இது எல்லாத்துக்குமே விடாமுயற்சி தான் பண்ணனும். இதையெல்லாம் விட்டுட்டு அப்படியே போயிடமுடியாது இல்ல. நமக்கும் வாழ்க்கையில் சில கோல்ஸ் இருக்கும். சிலது கிடைக்கும். சிலது கிடைக்காது. அப்போது விடாமுயற்சி தான் செய்யணும்.

அனிருத் உடைய இசை கேட்கும்போது எப்படி இருந்தது?

எனக்கு விடாமுயற்சி படத்தில் பின்னணியில் வந்த வயலின் இசை பிடித்திருந்தது. முதல் தடவை ட்ரெய்லர் ரிலீஸாகும்போது, அடுத்து முதல் பாட்டு ரிலீஸாகும்போது, அந்த இசை ரொம்பப்பிடிச்சிருந்தது. இப்போது அந்த இசை என் தலையில் உட்கார்ந்து இருச்சு. குறிப்பாக, இளம் ஆடியன்ஸை ஈர்க்கிற மாதிரி அனிருத் இசை இருந்தது

’விடாமுயற்சி’ திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 6 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.