Udit Narayan: 'அவர்ட்ட யாராவது சொல்லி நிறுத்த சொல்லுங்கடா' உதித் நாரயணனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..
Udit Narayan: பாடகர் உதித் நாராயண் சமீபத்தில் அவரது ரசிகைகளை முத்தமிட்ட வீடியோ வைரலான நிலையில், தற்போது அவரது பழைய வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Udit Narayan: பாடகர் உதித் நாராயண் சமீபத்தில், ரசிகையை உதடுகளில் முத்தமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனங்களை சந்தித்தார். இப்போது, அவர் பல ரசிகைகளை முத்தமிடுவது போன்ற மற்றொரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதித் நாராயணின் புதிய வீடியோ
புதன்கிழமை, எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பயனர் ஒருவர், உதித் நாராயணின் நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுக்க கூடி இருக்கும் காட்சியை பகிர்ந்தார். அந்த வீடியோவில் நீல நிற உடையில் இருந்த பாடகர், தன்னிடம் செல்ஃபி கேட்ட ரசிகர்கள் அருகில் வந்து, அங்குள்ள பல பெண் ரசிகைகளுக்கு முத்தம் கொடுத்தார். அதில் அவர் ஒரு பெண்ணின் உதடுகளில் முத்தமிட்ட நிலையிலும் ரசிகை சிரித்துக் கொண்டே நின்றார்.
ஆண்கள் பொருட்டு இல்லை
இந்த வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு விரைவாக பதிலளித்தனர். அதில் ஒருவர் உதித் நாராயணனை “அவர் நிறுத்த முடியாதவர்” என்று குறிப்பிட்டு கிண்டலடித்து உள்ளார். மற்றொருவர், செல்ஃபி கேட்ட ஆண் ரசிகரை அவர் எப்படி புறக்கணித்தார் என்பதையும் சுட்டிக்காட்டினார். “ஒரு ஆண் ரசிகர் செல்ஃபி கேட்டார், ஆனால் உதித் நாராயணுக்கு அது பொருட்டே இல்லை ” என்று கூறினார். மற்றொருவரோ “முத்தம் கொடுக்கும் செல்ஃபி புதிய ட்ரெண்ட்” என்று கிண்டலடித்தார். மேலும் ஒருவர் “அவருக்கு பைத்தியம் பிடித்துக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
சர்ச்சைக்கு உதித் பதில்
இதுபோன்ற நடவடிக்கைக்காக உதித் நாராயண் விமர்சனங்களை சந்திப்பது இதுவே முதல் முறை அல்ல. முன்னதாக, அவர் தனது பிரபலமான 'டிப் டிப் பர்சா பாணி' பாடலைப் பாடிக்கொண்டிருக்கும் போது பெண் ரசிகைகளுக்கு முத்தம் கொடுத்த வீடியோ வைரலானது. இதுகுறித்து HT Cityயிடம் அவர் அளித்த பேட்டியில் இந்த சர்ச்சைக்கு பதிலளித்தார். அப்போது, ர், “நான் 46 வருடங்களாக பாலிவுட்டில் இருக்கிறேன். என்னை வலுக்கட்டாயமாக ரசிகைகளை முத்தமிடுவர். உண்மையில், என் ரசிகர்கள் எனக்குக் காட்டும் அன்பைப் பார்க்கும்போது நான் கரம் கூப்பி நன்றி சொல்கிறேன். மேடையில் இருக்கும்போது, இந்த தருணம் மீண்டும் வரக்கூடாது என்று நினைத்து நான் வணங்குகிறேன்” என்றார்.
உதித்துக்கு ஆதரவு கரம்
பாடகர் அபிஜீத் பட்டாச்சார்யாவும் News18க்கு அளித்த பேட்டியில் உதித் நாராயணுக்கு ஆதரவாக பேசினார், “அவர் உதித் நாராயண்! பெண்கள் அவரைத் தேடி வந்தார்கள். அவர் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. உதித் நிகழ்ச்சி நடத்தும் ஒவ்வொரு முறையும், அவரது மனைவி இணைப் பாடகராக இருப்பார் என்பதில் எனக்குத் தெளிவு உள்ளது. அவர் தனது வெற்றியை அனுபவிக்கட்டும்! அவர் ஒரு ரொமாண்டிக் பாடகர். அவரோடு விளையாட முயற்சிக்காதீர்கள்” என்றார்.
உதித் நாராயண்
உதித் நாராயண் ஒரு பிரபலமான பின்னணிப் பாடகர், தெலுங்கு, கன்னடம், தமிழ், வங்காளம், சிந்தி, ஒடியா, பீஹாரி, நேபாளி, மலையாளம் மற்றும் அசாமியம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். நான்கு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ள அவர், 2009 இல் பத்மஸ்ரீ மற்றும் 2016 இல் பத்மபூஷண் விருதுகளைப் பெற்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்