தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ravinder Gave A Surprise To Mahalakshmi In The Middle Of The Night Mahalekshmi Melts To Get A Husband Like You

Mahalakshmi: மகாலெட்சுமிக்கு நள்ளிரவில் சர்ப்ரைஸ் தந்த ரவீந்தர்.. 'உன்னைப் போன்ற ஒரு கணவனைப் பெற மகாலெட்சுமி உருக்கம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 22, 2024 10:56 AM IST

Ravindar Chandrasekaran with Mahalakshmi Shankar: இந்த பிறந்த நாள் எனக்கு கலவையான உணர்வுகளால் நிரப்பப்பட்டுள்ளது. முதலில், என் கணவர் நள்ளிரவில் ஒரு சுவையான கேக்கைக் கொண்டு என்னை எழுப்பி ஆச்சரியப்படுத்தினார். அவரைப் பெற்றதை நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஐ லவ் யூ அம்மு.

மகாலெட்சுமிக்கு நள்ளிரவில் சர்ப்ரைஸ் தந்த ரவீந்தர்
மகாலெட்சுமிக்கு நள்ளிரவில் சர்ப்ரைஸ் தந்த ரவீந்தர்

ட்ரெண்டிங் செய்திகள்

சமூக ஊடகங்களில் மகாலெட்சுமி ரவீந்திரன் ஜோடி பாராட்டுக்களை விட அதிகமான விமர்சனங்களைதான் பெற்றனர்.

ஆனால், கடந்த சில மாதங்களாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் டைமிங் சரியாக இல்லை. ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மோசடி வழக்கில் கோடிக்கணக்கான பணத்தை விழுங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ரவீந்தர் சந்திர சேகர் சிறிது காலம் சிறையில் இருந்தார். அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். வீடு திரும்பிய அவர் சிறை அனுபவம் குறித்து பேசியதும் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதன் பின்னர் ரவீந்தர் சந்திரசேகரன் சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இதற்கிடையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தனது மனைவி மகாலட்சுமியைப் பற்றிய நீண்ட பதிவைப் பகிர்ந்து, திருமண நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு அவரிடமிருந்து எந்த இடுகையும் வெளிவரவில்லை. மனைவி மகாலட்சுமி புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக பகிர்ந்து வருகிறார்.

நள்ளிரவில் சர்ப்ரைஸ் கொடுத்த ரவீந்தர்

இந்நிலையில் நேற்று மனைவி மகாலட்சுமி சங்கரின் பிறந்தநாள். இந்த பிறந்தநாளில் மனைவி ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நடு இரவில் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்தார். நள்ளிரவில் சர்ப்ரைஸாக கேக் கொடுத்து "ஐ லவ் யூ அம்மு" குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து மகாலெட்சுமி தனது இன்ஸ்டா கிராமில் தகவல்களை பகிர்ந்தார். அதில்,

இந்த பிறந்த நாள் எனக்கு கலவையான உணர்வுகளால் நிரப்பப்பட்டுள்ளது. முதலில், என் கணவர் நள்ளிரவில் ஒரு சுவையான கேக்கைக் கொண்டு என்னை எழுப்பி ஆச்சரியப்படுத்தினார். அவரைப் பெற்றதை நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஐ லவ் யூ அம்மு. 

இரண்டாவதாக, என் அம்மாவும் சகோதரனும் என்னை மனநலம் குன்றிய நபர்களுக்கான இடத்திற்கு அழைத்துச் சென்று உணவு தானம் செய்தோம், இது மிகவும் மனதைத் தொடும் அனுபவமாக இருந்தது. என் ஏஞ்சல் அம்மா மற்றும் என் சிறிய சகோதரர் சோட்டிக்கு நன்றி. என் அப்பா வங்கதேசத்தில் இருந்து எனக்கு ஆச்சர்யங்களை வழங்கினார். நன்றி அப்பா. எல்லா நேரங்களிலும் எனக்கு துணையாக நின்ற என் மாமாவுக்கு (ரவியின் அப்பா) நன்றி. வாழ்த்துக்களுக்கு நன்றி அப்பா. 

இறுதியாக, என் சிறிய அசுரன் ஒரு கேக் மூலம் என்னை ஆச்சரியப்படுத்தினார், இது எனக்கு எப்போதும் சிறப்பு. நீ தான் என் உலகம் சாச்சா. இந்த அழகான ஆத்மாக்கள் அனைத்தும் என்னைச் சுற்றி இருப்பதில் நான் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் இருக்கிறேன். இந்த நாளில் என்னை வாழ்த்த நேரம் ஒதுக்கிய எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் என்னை நேசிக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லாமல் என்னால் முடிக்க முடியாது. நன்றி இவ்வாறு அதில் மகாலெட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்