57 Years Of Athey Kangal: ஒரே வாரத்தில் உருவாக்கிய த்ரில்லர் கதை! தெலுங்கில் வெளியான முதல் க்ரைம் த்ரில்லர் கலர் படம்
ஒரு பிரமாண்ட வீட்டின் செட்டை பார்த்து பிரமித்து போன இயக்குநர் ஏசி திருலோகசந்தர் ஒரே வாரத்தில் உருவாக்கிய த்ரில்லர் கதையாக அதே கண்கள் உருவானது. தமிழ், தெலுங்கில் பாகஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பயதோடு மிக பெரிய ஹிட்டாக அமைந்தது. தெலுங்கில் முதல் க்ரைம் திர்ல்லர் கலர் படமாகவும் உள்ளது.
பொதுவாகவே த்ரில்லர் படங்கள் என்றாலே விறுவிறுப்பான திரைக்கதை, திடுக் திருப்பங்கள், மாறுபட்ட கோணங்கள் கதை பயணிப்பது என பல சுவாரஸ்ய விஷயங்களில். அதில் சஸ்பென்ஸ் விஷயங்கள் அதில் இருந்தால் கூடுதல் விறுவிறுப்புடன் சீட் நுனிக்கே பார்வையாளர்களை வரவழைத்து விடும்.
ஆனால் இதுபோன்ற படங்கள் பெரும்பாலும் ரீப்பீட்டாக பார்க்கும் விதமாக இருக்காது. இதற்கு முக்கிய காரணமாக படத்தில் இருக்கும் முடிச்சுகள் தெரிந்த பின்னர் சுவாரஸ்யம் குறைவதில் இருந்து மனதில் பதிந்து விடும் விதமாக அழுத்தமான திரைக்கதை இல்லாமல் இருப்பது வரை பல காரணங்கள் இருக்கின்றன.
1960களில் தமிழ் சினிமாவில் வழக்கமான கதை களத்தில் இருந்து அவ்வப்போது வெளியாக ரசிகர்கள் இருக்கும் மாற்று சினிமா வரிசையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக வெளியாகி இன்றளவும் த்ரில்லர் படங்களுக்கான பென்ச்மார்க் படமாக இருந்து வருகிறது அதே கண்கள்.
ஒரு வாரத்தில் உருவான சுவராஸ்ய பின்னணி
ஏவிஎம் தயாரித்த மெஹர்பன் என்ற இந்தி படத்துக்காக பிரமாண்ட வீடு செட் போடப்பட்டது. இதன் அழகியலால் பிரமித்து போன் ஏ.வி.எம். செட்டியார் அந்த வீட்டை அப்படியே வைத்திருந்தார்.
இந்த வீட்டை பார்த்த அசந்து போன் இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர், அடுத்த ஒரு வாரத்தில் இந்த வீட்டை பின்னணியாக வைத்து உருவாக்கிய த்ரில்லர் கதைதான் அதே கண்கள்.
அப்போது பெண் ரசிகைகளின் கனவு கண்ணனாக இருந்த ரவிச்சந்திரன் நாயகனாகவும், ஆண்களின் கனவுக்கன்னியாக இருந்த காஞ்சனாக நாயகியாகவும் நடித்திருப்பார்கள். எஸ்.ஏ. அசோகன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், எஸ்வி ராமதாஸ், கே. பாலாஜி, ஏ. கருணாநிதி உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
க்ளைமாக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்
பணக்காரனான எஸ்.ஏ. அசோகன் வீட்டில் நடக்கும் தொடர் கொலைகள், அதன் பின்னணியில் இருக்கும் முகமூடி அணிந்த நபர், யார் அவர், எதனால் கொலை செய்கிறார் என்கிற பிளாஷ்பேக். இதுதான் படத்தின் ஒன்லைன். வழக்கமான பழிக்கு பழி கதையாக இருந்தாலும் தொடக்கம் முதல் க்ளைமாக்ஸ் வரை பார்வையாளர்கள் திக் திக் மனநிலையில் வைத்த படமாக அதே கண்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.
க்ளைமாக்ஸில் வில்லனை காட்டும் இடம், அதன் பின்னாள் இருக்கும் சுவாரஸ்யமும் தமிழ் சினிமாவில் அப்போது புதுமையாக இருந்தது. த்ரில்லர் படங்களுக்கான சிறந்த இன்ஸ்பிரேஷனாகவும் அமைந்தது.
படத்தின் க்ளைமாக்ஸை வரும் திருப்பத்தை கருத்தில் கொண்டு, படம் தொடங்குவதற்கு முன்னரே "தாழ்மையான வேண்டுகோள். படத்தைப் பாருங்கள், ரசியுங்கள். உங்களைப் போல் உங்கள் நண்பர்களும், மற்றவர்களும் ரசிக்க வேண்டுமல்லவா.. எனவே கதையின் முடிவை யாரிடமும் சொல்லாதீங்க" என்ற அன்பு நிபந்தனையும் பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டது.
ஹீரோயின் அல்லது வேறு எதாவது கேரக்டர் ஓ என கத்தும் டெம்ப்ளே காட்சி அதிகம் நிறைந்த முன்னோடி படமாக அதே கண்கள் உள்ளது.
தெலுங்கிலும் சூப்பர் ஹிட்
தமிழில் உருவான அதே நேரத்தில் தெலுங்கிலும் கிருஷ்ணா, காஞ்சனா நடிக்க அவே கல்லு என்ற பெயரில் இந்த படம் உருவானது. இதுதான் தெலுங்கில் உருவான முதல் கலர் க்ரைம் த்ரில்லர் படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது. தமிழில் வெளியாகி ஆறு மாதங்கள் கழித்துதான் படம் தெலுங்கில் வெளியிடப்பட்டது.
பாடல்கள் ஹிட்
வாலி பாடல் வரிகள் எழுத வேதா என்று அழைக்கப்பட்ட வேதாச்சலம் படத்துக்கு இசையமைத்திருப்பார். சுசிலா பாடிய வா அருகில் வா சிறந்த கிளாசிக் பாடலாக இருந்து வருகிறது. இதுதவிர பொம்பள ஒருத்தி, எத்தனை அழகு, பூம் பூம் மாட்டுக்காரன் கண்ணுக்கு தெரியாதா போன்ற பாடல்களும் ஹிட்டாகின.
பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
ஈஸ்ட்மேன் கலரில் உருவான த்ரில்லர் படமான அதே கண்கள் அந்த காலகட்டத்தில் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்தது. நடிகர் ரவிச்சந்திரன் சினிமா கேரியரில் முக்கிய படமாகவும் இது அமைந்திருந்தது. தமிழில் வெளியான சிறந்த த்ரில்லர் படமாகவும், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளிய அதே கண்கள் வெளியாகி இன்றுடன் 57 ஆண்டுகள் ஆகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்