HBD Ravi Teja: நெப்போட்டிசம் நிறைந்த டோலிவுட்! தன் விடாமுயற்சியால் கிக் கொடுத்தவர்! மாஸ் மகாராஜா ரவி தேஜா பிறந்தநாள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Ravi Teja: நெப்போட்டிசம் நிறைந்த டோலிவுட்! தன் விடாமுயற்சியால் கிக் கொடுத்தவர்! மாஸ் மகாராஜா ரவி தேஜா பிறந்தநாள்!

HBD Ravi Teja: நெப்போட்டிசம் நிறைந்த டோலிவுட்! தன் விடாமுயற்சியால் கிக் கொடுத்தவர்! மாஸ் மகாராஜா ரவி தேஜா பிறந்தநாள்!

Suguna Devi P HT Tamil
Jan 26, 2025 07:00 AM IST

HBD Ravi Teja: திரைத் துறையில் ஒருவர் தன்னை நிலைநாட்ட வேண்டும் என்றால் அதற்கு ரசிகர்களின் ஆதரவும் தேவைப்படுகிறது. அப்படி தனது அயராத நீண்ட கால உழைப்பால் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் தான் ரவி தேஜா, அவர் இன்று தனது 57 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

HBD Ravi Teja: நெப்போட்டிசம் நிறைந்த டோலிவுட்! தன் விடாமுயற்சியால் கிக் கொடுத்தவர்! ரவி தேஜா பிறந்தநாள்!
HBD Ravi Teja: நெப்போட்டிசம் நிறைந்த டோலிவுட்! தன் விடாமுயற்சியால் கிக் கொடுத்தவர்! ரவி தேஜா பிறந்தநாள்!

படிப்படியான முன்னேற்றம்  

ஆந்திரா பிரதேசத்தில் உள்ள கோதாவரி மாவட்டம் ஜக்கம் பேட்டையில் 1968 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று பிறந்தார். இவரது தந்தை ராஜ் கோபால் ராஜு ஒரு பார்மசிஸ்ட் ஆக பணி புரிந்தார். இவருக்கு எந்த வித திரைத்துறை பின்னணியும் கிடையாது.  ரவி தேஜாவின் முழுப் பெயர் ரவி சங்கர் ராஜு பூபதி ராஜு ஆகும். ரவி தேஜா சிறுவயதிலிருந்தே திரைப்படத்தின் மீது அதிக ஆர்வத்துடன் இருந்தார். தெலுங்கு திரையுலகில் வாய்ப்புக்காக சென்னைக்கு வந்து பல முயற்சிகளுக்கு பின்னர் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். 

இவரது ஆரம்ப காலக்கட்டத்தில் இவருக்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை. கர்தவ்யம் படத்தின் மூலம் அறிமுகமான ரவி தேஜா சைதன்யா, அல்லரி பிரியுடு போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். சிறு பாத்திரங்களில் நடித்து வந்த ரவிதேஜாவுக்கு நீ கோசம் என்ற படத்தின் வழியாக  ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் ஸ்ரீனு வைட்லா இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியை கொடுக்க வில்லை. இருப்பினும் ரவிதேஜாவின் சிறந்த நடிப்பிற்கு ஆந்திர அரசின்  நந்தி விருது கிடைத்தது.  இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கு ஹீரோவாக வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், அவருக்கு நிறைய கதாபாத்திரங்கள் வந்தன. எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் தவற விடாத ரவி தேஜா தனது திறமையை நிரூபித்துள்ளார். இந்த நேரத்தில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் இட்லு ஷ்ரவாணி சுப்ரமணியம் படத்தில் ரவி தேஜாவுக்கு மீண்டும் ஒரு படம் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்தது.

நெப்போ கிட் இல்லை 

தெலுங்கில் பல மாஸ் ஹிட்டான படங்களை கொடுத்து மாஸ் மகாராஜாவாக வரும் ரவி தேஜாவிற்கு எந்த சினிமா பின்னணியும் இல்லை. ஆனால் தெலுங்கு திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கமே அதிகம். அன்றில் இருந்து இன்று வரை பல நூற்றுக்கணக்கான வாரிசு நடிகர்கள் தெலுங்கு திரையுலகில் இருந்து வருகின்றனர். ஒரு சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வருவது இந்தியாவின் பெரும்பாலான சினிமாத் துறைகளில் நடக்க கூடிய ஒன்று தான். ஆனால் இது தெலுங்கு திரையுலகில் இது தீவிரமாக உள்ளது என்றே கூறலாம். 

இது போன்ற சூழ்நிலையில் துணை நடிகராக, உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது தெலுங்கு திரையுலகின் மாஸ் ஹீரோவாக ஜொலித்து வருகிறார். நாம் தமிழில் ரசித்து பார்த்த பல படங்களின் தெலுங்கு வெர்ஷனில் ரவி தேஜா தான் நடித்துள்ளார். கார்த்தி நடித்த சிறுத்தை படம் முதலில் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் விக்ரம் சிங் ரத்தோர் என வந்தது. தமிழில் ஜெயம் ரவியில் கலாட்டாவான நடிப்பில் வெளியாகி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் தில்லாலங்கடி, இப்படமும் தெலுங்கில் வெளியான கிக் படத்தின் ரீமேக் தான். மேலும் தமிழில் வெளியான ஆட்டோகிராப் எனும் உணரவூப்பூர்வமான படத்தை தெலுங்கில் நா ஆட்டோகிராப் என ரீமேக் செய்யப்பட்டது. இதிலும் ரவி தேஜா தான் நடித்துள்ளார். 

மாஸ் மகாராஜா ரவி தேஜா 

ரவி தேஜாவின் கேரியரை இரண்டு இயக்குனர்கள் புரட்டிப் போட்டனர். அவர்களில் ஒருவர் கிருஷ்ணவம்சி, மற்றவர் பூரி ஜெகநாத். மேலும் இந்த பட்டியலில் விக்ரம் சிங் ரத்தோர் படத்தை இயக்கிய ராஜமெளலிக்கும் ஒரு தனி இடம் உண்டு. ஆனால் தற்போது வெளியாகும் படங்கள் ஏதும் ரவி தேஜாவின் பழைய படங்கள் போல மக்களை கவர வில்லை. பாடல், ஆக்சன் காட்சிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை கதைக்கும் அளித்தால் தெலுங்கு சினிமாவின் உண்மையான மாஸ் மகாராஜா ரவி தேஜா தான். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.