Kathalikka Neramillai: மாடர்ன் டே ரிதம்.. ஏ.ஆர். ரஹ்மான் சம்பவம் - காதலிக்க நேரமில்லை எப்படி இருக்கிறது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kathalikka Neramillai: மாடர்ன் டே ரிதம்.. ஏ.ஆர். ரஹ்மான் சம்பவம் - காதலிக்க நேரமில்லை எப்படி இருக்கிறது?

Kathalikka Neramillai: மாடர்ன் டே ரிதம்.. ஏ.ஆர். ரஹ்மான் சம்பவம் - காதலிக்க நேரமில்லை எப்படி இருக்கிறது?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 14, 2025 03:17 PM IST

Kathalikka Neramillai X Review: பொங்கலை நாளை முன்னிட்டு மூன்று படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், காதலிக்க நேரமில்லை படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

மாடர்ன் டே ரிதம்.. ஏ.ஆர். ரஹ்மான் சம்பவம் - காதலிக்க நேரமில்லை எப்படி இருக்கிறது?
மாடர்ன் டே ரிதம்.. ஏ.ஆர். ரஹ்மான் சம்பவம் - காதலிக்க நேரமில்லை எப்படி இருக்கிறது?

ரெமாண்டிக் காமெடி பாணியில் உருவாகியிருக்கும் காதலிக்க நேரமில்லை படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கின்றன. படத்தை பார்த்த பிரபலங்கள், விமர்சகர்கள் பலரும் படத்தை பாரட்டி வருகின்றனர்.

காதலிக்க நேரமில்ல எக்ஸ் விமர்சனம்

"நவீன கால உறவுகளை பற்றிய காதல் நகைச்சுவைத் திரைப்படம், இளைஞர்களை நிச்சயமாக ஈர்க்கும். புத்திசாலித்தனமாக தொகுக்கப்பட்ட இந்த படத்தில், கதாபாத்திரங்கள் திரையில் தன்னம்பிக்கையுடனும் அழகாகவும் இருக்கிறார்கள்.

ரவி மோகன் சிறந்த ஃபார்மில் இருக்கிறார், மேலும் அவர் தனது நல்ல தோற்றத்தாலும் கவர்ச்சியாலும் வசீகரிக்கிறார். அவர் காதலனாகவும், இதய நொறுங்கி போனவராகவும் மிகவும் சிம்பிளாக நடித்துள்ளார். நேர்மையாகச் சொல்வதென்றால் அவர் மிக சிறப்பாக செய்துள்ளார். அவருக்கு இணையாக நித்யா மேனன் திரையில் மிக அழகாக தெரிவதுடன், தான் ஒரு சிறந்த நடிகை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசை ஹைலைட்டாக உள்ளது. துணை நடிகர்கள் அனைவரும் நன்றாகவே நடித்துள்ளார்கள்இந்த பண்டிகைக் காலத்தில் நல்லதொரு சுவாரஸ்யமான, பொழுதுபோக்கு படமாக உள்ளது" என படம் குறித்து பிரபல சினிமா விமர்சகரான ஸ்ரீதேவி ஸ்ரீதர் கூறியுள்ளார்.

இதேபோல் பொதுமக்களில் பலரும் படம் குறித்து நேர்மறையான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக ஏ.ஆர். ரஹ்மான் இசை அனைவரையும் இழுக்கும் விதமாக இருப்பதாகவும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இயக்குநர்கள் பாராட்டு

காதலிக்க நேரமில்லை படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ், "ஆண் - பெண்களுக்கு இடையிலான உறவில் ரொம்ப முக்கியமான ஒரு பகுதியை இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது. மிகவும் நன்றாக வந்திருக்கிறது. உணர்வுப்பூர்வமான படமாகதவும், எதிர்கால வாழ்க்கையை கனெக்ட் செய்யும் விதமாகவும் இருக்கிறது. பொங்கலுக்கு ஏற்ற ஒரு படமாக காதலிக்க நேரமில்லை இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் ஏ.எல். விஜய், "காதலிக்க நேமில்லை படத்தில் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும் நன்றாகவே வந்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தான் ஹீரோ. கண்டிபபா இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

காதலிக்க நேரமில்லை கதை

சித்தார்த் (ரவி மோகன்) ஐடி ஊழியர். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் ஸ்ரேயாவை (நித்யா மேனன்) காதலிக்கிறார். தனது காதலை நண்பர்களின் உதவியால் அவரிடம் வெளிப்படுத்துகிறார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சித்தார்த்தின் கல்லூரி காதலி குறுக்கிடுகிறாள். இதனால் சித்தார்த் தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்து அவரிடமிருந்து பிரிந்து செல்கிறார் ஸ்ரேயா.

சித்தார்த்தின் காம்பிரமைஸ் முயற்சி எதுவும் பலன் அளிக்காமல் போகிறது. கர்ப்பிணியாக இருக்கும் ஸ்ரேயா மது பழக்கத்தில் தன்னை ஆழ்படுத்தி கொள்கிறார். அதன் பிறகு இருவரும் இணைந்தார்களா? அவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை சுவாரஸ்யம் மிக்க திரைக்கதையாக சொல்லியிருக்கிறார்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.