Ravi Mohan: 'எனக்கு இமயமலை போகணும்.. எங்கள் இரண்டு பேர் ஈகோவும் சண்டையும் இதற்குத்தான்’: ரவி மோகன் ஓபன் டாக்
Ravi Mohan: 'எனக்கு இமயமலை போகணும்.. எங்கள் இரண்டு பேர் ஈகோவும் சண்டையும் இதற்குத்தான்’: ரவி மோகன் ஓபன் டாக்காகப் பேசியுள்ளார்.

Ravi Mohan - ஜெயம் ரவி, தன்னுடைய பெயரை ரவி மோகனாக மாற்றிக்கொண்டார். மேலும், அவரது நடிப்பில் சமீபத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகி இருக்கிறது.
இதுதொடர்பாக ரவி மோகன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதின் தொகுப்பு,
'நீங்கள் அம்மாவுக்குப் பிடிச்சவரா, நீங்கள் அப்பாவுக்குப் பிடிச்சவரா?
நான் கடைசிப்பையன் என்பதால் எல்லோருக்கும் பிடிச்சவன். எங்க அம்மா, அப்பா மாதிரி அப்படி ஒரு ஜோடியைப் பார்க்கமுடியாது. அந்த மாதிரி புரொடக்சன் ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க. அந்த மாதிரி ஆட்கள் இப்போது வரமாட்டியுறாங்கன்னு தான் தோணுது. அப்பா, அம்மாவைப் பத்தி சொல்லுவாங்க. அவளுக்கு கெட்டது என்றாலே என்னவென்று தெரியலைன்னு.
நம் மனசில் நிறைய கவலை இருக்கிறப்போ, யார்கிட்ட சொல்வீங்க?
- நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன். கவலைன்றது எனக்கு இல்லைன்னு தான் சொல்வேன். எனக்கு அந்தளவுக்கு ஒரு மெச்சூரிட்டி இருக்கு. இன்னிக்கி கவலையா இருக்கிறது நாளைக்கு ஒன்னுமே இல்லாமல் போயிடும். நம்ம கவலையை மத்தவங்க கிட்ட திணிச்சு, அது அவங்களைப் பாதிக்கணுமா?. ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கூட ஷேர் பண்ணமாட்டேன். யார்கிட்டேயும் திறந்து பேச எனக்கு வரவில்லை.
என்னைப்பொறுத்தவரை வாழ்க்கையில் அதிகப்பட்சம் சிரிச்சிட்டு இருக்கணும். அதுதான் ஸ்கூல் டைமில் இருந்து நினைச்சுகிட்டு இருந்தது.
யார்கிட்ட அதிகம் சண்டைபோடுவீங்க?
அண்ணா, அக்கா இரண்டு பேரில் அக்காகிட்டதான் அதிகம் சண்டைபோடுவேன். அக்கா வந்து எப்படியென்றால் யாரையும் ஜட்ஜ் செய்யமாட்டார். ஃப்ரெண்ட் மாதிரி. போறபோக்கில் பிடிச்ச விஷயம், பிடிக்காத விஷயம் இது எல்லாத்தையும் சொல்லிருவாங்க. அதனால் மனதில் குழப்பம் இருந்தால் அக்காகிட்டப் போய் சொல்வேன்.
அக்கா சமைச்சு கொடுத்திருக்காங்களா?
அக்கா நிறைய சமைச்சு கொடுத்திருக்காங்க. அதில் பிரியாணி தான் ரொம்பப் பிடிக்கும்.
ரவி வீட்டில் கோபப்படுவாரா, மென்மையானவரா?
எல்லோரையும் மாதிரி தான் மேடம். கோபம் வந்து கத்தினாலும், அஞ்சு நிமிஷத்தில் புஷ்ஷுனு போயிடும். அஞ்சு நிமிஷத்தில் சரியாகிடும். நான் தப்பு இருந்தால் மன்னிப்புக்கேட்டிருவேன். என் கோபத்தை தெரியப்படுத்திருவேன். இது எனக்குப் பிடிக்கல. இதைப் பண்ணாதீங்கன்னு. இல்லை நான் பண்ணுனது தப்புனு தெரியப்படுத்திடுவேன்.
நிறைய இயக்குநர்கள்கிட்ட வொர்க் செய்தாலும்,அண்ணாகூட வொர்க் செய்யும்போது, என்ன வித்தியாசம் இருக்கும்?
- ஒரு கம்பெர்ட்டபிள் தான். நாங்க கண்ணுலேயே சில நேரத்தில் புரிஞ்சுக்குவோம். பேசக் கூடத் தேவையில்லை. ஒரு ஒன்மோர் போச்சுனா, கண்ணுலேயே சொல்வான். எங்கள் இரண்டு பேர் ஈகோவும் சண்டையும் ஷாட்டுக்குத்தான் இருக்கும். தனிப்பட்ட முறையில் இருக்காது. நான் போய் சில லைன்களை அழித்தால் ஒத்துக்குவேன். அப்பா சொல்வார். நம்ம, நம்மளைத் திட்டிக்கலாம். ஆடியன்ஸ் நம்மளை திட்டக்கூடாதுன்னு சொல்லியிருக்கார். அது எங்களைத் திட்டிக்கிறது வளர்ச்சிக்காகத்தானே தவிர, விட்டுப்போகக் கிடையாது.
ரவிகிட்ட பிடிச்ச ஐந்து விஷயம்?
நான் கொஞ்சம் பொறுமைசாலி. இன்னொன்னு மத்தவங்களுக்கு நல்லது பண்ணனும் நினைப்பேன். ஃபேமிலிக்கு மரியாதை கொடுப்பேன். வேலையில் சின்சியராக இருப்பேன். பிரெண்ட்ஷிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.
இதை மாத்தணும் அப்படிங்கிற ஐந்து விஷயம்?
சின்ன சின்ன கெட்ட பழக்கங்களை மாத்தணும்னு நினைக்கிறேன். கொஞ்சம் சோம்பேறியாக இருக்கிறேன். கெட்ட விஷயங்கள் எல்லாம் சீக்கிரமாக வருது.
எப்படி படம் பண்ணனும் நினைக்குறீங்க?
மாஸாக நடிக்கணும் என்கிற ஆசை இப்போது வந்திருக்கு. இத்தனை வருஷமாக பரிசோதனை முயற்சிகள் செய்யணும்னு ஆசை இருந்துச்சு.
உங்களுக்குப் படம் முடிச்சதுக்கு அப்புறம், என்ன பண்ணனும்னு நினைக்குறீங்க?
எனக்கு இமயமலை போகணும்னுதான் ஆசை இருக்கு. வேற எதுவும் இல்லை.
எதற்கு நீங்கள் அதிகமாக செலவு செய்யணும்னு நினைக்குறீங்க?
அடிப்படையாக எனக்கு செலவுன்னு எதுவும் இல்லை. ஹாலிடே, கார் ரொம்பப் பிடிக்கும். 12 வருஷம் ஒரே கார் வைச்சிருந்தேன். எனக்கு இரண்டு, மூணு கார் வைக்கப் பிடிச்சிருக்கு. பெராரி கார் ரொம்பப்பிடிக்கும். இப்போது ரேஞ்ச் ரோவர் வைச்சிருக்கேன்' என ரவி மோகன் சொன்னார்.
நன்றி: பிஹைண்ட்வுட்ஸ் டிவி

டாபிக்ஸ்