VEERA CHANDRAHASA: யக்ஷகானா கலை பின்னணி படம்! எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கேஜிஎஃப் இசையமைப்பாளர் இயக்கும் வீர சந்திரஹாசா
KGF Music Director New Movie veera chandrahasa: யக்ஷகானா கலை வடிவ பின்னணி கேஜிஎஃப் பட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் வீர சந்திரஹாசா என்ற படத்தை உருவாக்கி வருகிறார். ரசிகர்களுக்கு இந்த படம் புதுமையான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது
பான் இந்தியா அளிவில் வரவேற்பை பெற்ற கேஜிஎஃப், சலார் போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். இதையடுத்து இவர் 'வீர சந்திரஹாசா' என்ற படத்தை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்குகிறார்.
இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். அத்துடன் இந்த திரைப்படம் அவரது கலையுலக பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.
இயக்குநர் ரவி பஸ்ரூர் இயக்கிய திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் எதார்த்தமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றவை இருக்கும். மேலும் அவரது இயக்கத்தில் உருவாகும் 'வீர சந்திரஹாசா' படம் பாரம்பரியத்தை குறிப்பிடத்தக்க வகையில் அதன் எல்லைகளை மேலும் விரிவடைய செய்யும் என்கிறார்.
யக்ஷகானா கலை பின்னியில் உருவாகும் படம்
'வீர சந்திரஹாசா'வை வேறு படைப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்துவது கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவின் அற்புதமான விளக்க படைப்பாகும். பன்னிரண்டு ஆண்டுகளாக ரவி பஸ்ரூர் யக்ஷகானாவை வெள்ளி திரைக்கு கொண்டுவர வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தார்.
இந்த திரைப்படம் அந்த லட்சியத்தின் பலனை பிரதிபலிக்கிறது. இந்த முயற்சி படைப்பு ரீதியிலான பாய்ச்சல் மட்டுமல்ல. ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மைல்கல் என்றும் சொல்லலாம்.
இந்த படைப்பில் கணிசமான வளங்களை முதலீடு செய்வதன் மூலம், இந்த செழுமை மிக்க கலை வடிவத்தை பாதுகாத்து கொண்டாடுவதற்கு இயக்குநரான ரவி பஸ்ரூர் மிகுந்த துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் வழங்கி உள்ளார்.
யக்ஷகானாவை சினிமா மொழியில் மாற்றியமைக்கும் முயற்சி என்பது துணிச்சலானது மற்றும் பாராட்டுக்குரியது. இதற்கு நிதி முதலீடு மட்டுமல்ல. கலை வடிவத்தின் நுணுக்கங்களை பற்றிய ஆழமான புரிதலையும், அதன் அதிர்வை திரையில் மொழிபெயர்க்கும் திறனும் தேவை.
இத்தகைய முயற்சி சவால்கள் நிறைந்தது. ஆனால் இது உலகளாவிய தளத்தில் யக்ஷகானா மற்றும் பிற பாரம்பரிய கலை வடிவங்களின் பரந்துபட்ட பாராட்டுக் வழி வகுக்கிறது.
புதிய மற்றும் ஆக்கபூர்வமான வழிகளில் அவர்களின் கலாச்சார பாரம்பரியத்தை ஆராயவும், வெளிப்படுத்தவும், மற்றவர்களை ஊக்குவிக்கவும் அக்கலையின் புதுமை மற்றும் ஆற்றலுக்காக. இந்த அற்புதமான அணுகுமுறையுடன் தொடங்கப்பட இருக்கும் 'வீர சந்திரஹாசா' கொண்டாடப்பட வேண்டும்.
ரவி பஸ்ரூர் படங்கள்
2014இல் வெளியான கர்கர் மண்டலா என்ற படம்தான் ரவி பஸ்ரூர் இயக்கிய முதல் படம். குந்தபுரா பகுதிகளில் பேசும் கன்னட பாஷையில் உருவாகியிருந்தது இந்த படம். குந்தபுரா கன்னட பாஷை என்பது உடுப்பி மாவட்டத்தில் பேசப்படும் வித்தியாச வார்த்தைகள் மற்றும் ஒலிகள கொண்ட கன்னட மொழியாக உள்ளது.
இதையடுத்து 2016இல் பிலிண்டர் என்ற குந்தபுரா கன்னட பாஷை படத்தையும், 2018இல் கடக, 2019இல் கிர்மிட் ஆகிய படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
கேஜிஎஃப் இசையமைப்பில் தெறிக்கவிட்டு, சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த ரவி பஸ்ரூர், தற்போது கர்நாடகாவின் பாரம்பரிய கலையாக திகழும் யக்ஷகானாவை வைத்து இவர் இயக்கும் வீர சந்திரஹாசா படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்