Raveena Tandon: ட்ரைவரால் வந்த வினை; குடிபோதையில் தர்ம அடி வாங்கினாரா KGF நடிகை.. நடந்தது என்ன?
Raveena Tandon: மும்பை ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனாவின் வீட்டின் அருகே அவரது காரை ரவீனாவின் ட்ரைவர் நிறுத்த முயன்று இருக்கிறார். அப்போது காரானது, பெண் ஒருவரின் மீது மோதி அவர் காயமடைந்ததாக புகார் எழுந்தது. - நடந்தது என்ன?
பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனுக்கு அறிமுகமே தேவையில்லை. இவர் கடந்த வருடம் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில், இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரது மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. இவர் அண்மையில் குடும்பத்தினர் ஒருவரால் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அவை தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நடந்தது என்ன?
மும்பை ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனாவின் வீட்டின் அருகே அவரது காரை ரவீனாவின் ட்ரைவர் நிறுத்த முயன்று இருக்கிறார். அப்போது காரானது, பெண் ஒருவரின் மீது மோதி அவர் காயமடைந்ததாக புகார் எழுந்தது. மேலும் ரவீனாவின் ஓட்டுநர் பாதிக்கப்பட்டவர்களை சரமாரியாக தாக்கியதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து காரில் இருந்து வெளியே வந்த ரவீனா, அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்த பலர் ஒன்று கூடி ரவீனாவை தாக்கிய நிலையில், அவர் என்னை அடிக்காதீர்கள் என்று கத்தினார். மேலும் அவரை மொபைல் போனில் படம் பிடிப்பவர்களையும் அவர் வேண்டாம் என்று மறுத்தார். இது தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான விசாரணை குறித்தான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தவறான புகார்
அதன் படி, ரவீனா டாண்டனுக்கு எதிராக தவறான புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது ரவீனாவின் கார் யார் மீதும் மோதவில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது.
இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், “ இது ஒரு தவறான குற்றச்சாட்டு. நாங்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் பார்த்து விட்டோம். கார் ஓட்டுநர் வண்டியை பின்னோக்கி எடுக்கும் போது, இந்த குடும்பத்தினரும் அங்கு சாலையை கடந்து இருக்கின்றனர்.இதனையடுத்து காரை நிறுத்திய குடும்பத்தினர், ட்ரைவரிடம் காரை எடுக்கும் போது பின்னால் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு இயக்குமாறு கூறியிருக்கிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறி, ஒரு கட்டத்தில் சண்டை வெடித்திருக்கிறது. இந்த நிலையில், தன்னுடைய ட்ரைவர் தாக்கப்படுவதை பார்த்த ரவீனா அங்கு சென்று அவரை காப்பாற்ற முயன்று இருக்கிறார். ஆனால் அந்த கும்பல், அவரையும் தாக்கி இருக்கிறது.இந்த மோதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அப்போது ரவீனா போதையில் இருந்ததாக சொல்லப்பட்டது. அதிலும் உண்மை இல்லை” என்று பேசினார். இது குறித்து ரவீனா, அவரது ட்ரைவர் மற்றும் அந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் பின்னர் அந்த புகாரை அவர்கள் வாபஸ் பெற்று விட்டனர். ரவீனா டாண்டன் பொதுவெளியில் இப்படி தாக்கப்பட்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்