Vijay Devarakonda And Rashmika: இப்போதைக்கு ரிலேஷன்ஷிப் மட்டும் தான்! நிச்சயதார்த்தம் எப்போது தெரியுமா? வெளியான தகவல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Devarakonda And Rashmika: இப்போதைக்கு ரிலேஷன்ஷிப் மட்டும் தான்! நிச்சயதார்த்தம் எப்போது தெரியுமா? வெளியான தகவல்

Vijay Devarakonda And Rashmika: இப்போதைக்கு ரிலேஷன்ஷிப் மட்டும் தான்! நிச்சயதார்த்தம் எப்போது தெரியுமா? வெளியான தகவல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 17, 2024 05:40 PM IST

இப்போதைக்கு இல்லாவிட்டாலும், எப்போது வேண்டுமானாலும் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா திருமண நிச்சயம்தார்த்தம் நடக்கும் என விவரம் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவுக்கு அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும், அதன் பின்னர் இந்த ஆண்டில் அவர்களின் திருமணம் நடைபெறும் என வதந்திகள் பரவின.

இதையடுத்து இந்த ஸ்டார்களின் திருமண தகவல் குறித்து தற்போது லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல ஊடகத்தில் இருவருக்கும் நெருக்கமானவர்கள் அளித்த தகவலின்படி, " விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா திருமணம் தொடர்பாக வெளியாகும் தகவல் உண்மையில்லை எனவும், தங்களது காதல் வெளிப்படுத்தவோ அல்லது மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்யவோ போவதில்லை" என தெரியவந்துள்ளது.

அத்துடன், " அவர்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. இருவரும் காதலிக்கவில்லை. அவர்களுக்கு இடையே இருக்கும் நெருக்கம் சிலரை இப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே அவர்களுக்கு இடையே நிச்சயதார்த்தம் என்பது பொய்".

தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக லிவிங் டூகெதரில் இருந்து வந்தாலும், மகிழ்ச்சியுடனும், தங்களது உறவு குறித்து தெளிவாகவும் இருந்து வருகிறார். எனவே தற்போதைக்கு அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளபோவதில்லை. இருவரும் தங்களது பணியில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அதே சமயம் இவர்களின் நிச்சயதார்த்தம் இப்போது இல்லாவிட்டாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்" எனவும் கொக்கி போடும் விதமாக நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஆகியோர் தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்ட வீட்டில் ராஷ்மிகா சமீபத்தில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஜோடி அவ்வப்போது ஒன்றாக இணைந்து விடுமுறையை கொண்டாட வெளிநாடு செல்கிறார்கள்.

சமீபத்தில் வெளிநாடு செல்ல ஏர்போர்ட் சென்றபோது, விஜய தேவரகொண்டா அணிந்திருந்தது போல் ஹூட்டியை ராஷ்மிகாவும் அணிந்திருந்தார். இவர்கள் இருவரும் முதல் முறையாக தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கீதா கோவிந்தம் படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போதே இந்த ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து டியர் காமரெட் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் ரியல் லைப்பிலும் இணைய இருப்பதாக தொடர்ந்து செய்தி வெளியான வண்ணம் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.