தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rashmika Mandanna Thanks Delhi Police After Deepfake Video Creator Arrested

Rashmika Mandanna: ’23 வயசுல இவ்வளவு ஆட்டமா? ராஷ்மிகாவின் டீப்பேக் வீடியோவை உருவக்கியவரை தூக்கிய போலீஸ்!’

Kathiravan V HT Tamil
Jan 21, 2024 12:32 PM IST

”Rashmika Mandanna: கைது செய்யப்பட்ட நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோயர்ஸ்களை அதிகரிக்க இந்த டீஃப் பேக் வீடியோவை உருவாக்கியதாக கூறி உள்ளார்”

ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ புகைப்படங்கள்
ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ புகைப்படங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கறுப்பு நிற வொர்க் அவுட் உடை அணிந்து, லிஃப்ட் ஒன்றின் உள்ளே நடிகை ராஷ்மிகா மந்தனா நுழையும் வீடியோ ஒன்று வைரல் ஆனது. அரைகுறை ஆடை உடன் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ வெளியானது குறித்து சமூகவலைத்தளங்களில் பேசு பொருளான நிலையில், இது டீப்ஃபேக் வீடியோ என தெரிய வந்தது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வீடியோவில் இருந்தவர் பிரிட்டிஷ்-இந்திய சமூக ஊடக ஆளுமை ஜாரா படேல் என்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக, இந்த டீப் பேக் வீடியோ தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவுகள் 465, 469 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66C, 66E ஆகியவற்றின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, கருத்து தெரிவித்திருந்த ராஷ்மிகா மந்தனா “இது எல்லாருக்கும் நடக்குது. முதலில்அமிதாப் பச்சன் எனக்கு சப்போர்ட் செய்தார். பிறகு எல்லாரும் சப்போர்ட் செய்தார்கள். முதலில் வருத்தமாக இருந்தது. ஆனால் சாதாரணமாகிவிட்டது. முதலில் பயமாக இருந்தது. ஆனால் பார்த்ததும் செய்யலாம் என்று நினைத்தேன். நாம் கவலைப்படக்கூடாது.ஆனால் அனைவரும் முன் வந்து எங்களுக்கு ஆதரவளித்தால் அது நடக்கும்.

இது சாதாரண விஷயம் அல்ல, ஆனால் நாங்கள் எதிர்வினையாற்ற வேண்டும். இப்போது அவர்கள் இதுபோன்ற விஷயங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறார்கள். . அதனால் எல்லா பொண்ணுங்களிடமும் சொல்ல விரும்புகிறேன். இது சாதாரண விஷயம் இல்லை. உங்களுக்கு நடக்கும் போது அமைதியாக இருக்காதீர்கள்” என கூறி இருந்தார்.

ராஷ்மிக்கா மந்தனாவின் டீஃப் பேக் வீடியோவை உருவாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 23 வயதான ஈமணி நவீன் என்பவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளர்.

இந்த கைது சம்பவம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, டெல்லி சைபர் க்ரைம் காவல்துறைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொறுப்பானவர்களைக் கைது செய்ததற்கு நன்றி. என்னை அன்புடன் அரவணைத்து, ஆதரவளித்து, என்னைக் காக்கும் சமூகத்திற்கு உண்மையிலேயே நன்றியுள்ளவனாக உணர்கிறேன்" என கூறி உள்ளார்.

"பெண்கள் மற்றும் சிறுவர்கள் - உங்கள் அனுமதியின்றி உங்கள் படம் எங்கும் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது மார்பிங் செய்யப்பட்டாலோ. அது தவறு! மேலும் இது உங்களை ஆதரிக்கும் நபர்களால் சூழப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டுவதாக நம்புகிறேன், நடவடிக்கை எடுக்கப்படும்!" என்றும் மந்தனா தனது பதிவில் கூறி உள்ளார்.

இந்த கைது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோயர்ஸ்களை அதிகரிக்க இந்த டீஃப் பேக் வீடியோவை உருவாக்கியதாக கூறி உள்ளார்.

டீப்ஃபேக் என்பது ஒரு டிஜிட்டல் முறையாகும், இதில் பயனர்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவருடைய தோற்றத்தை மற்றொருவரின் முகத்துடன் இணைத்து நம்பத்தகுந்த வகையில் மாற்ற முடியும். வருங்காலங்களில் இது போன்ற தொழில்நுட்பங்களால் போலி செய்திகள் அதிகம் பரவும் அபாயம் உள்ளதாக தொழில் நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.