Rashmika Mandanna: ‘கரு கருப்பாயி’ - கருப்பு உடையில் ஒய்யாரமாக நடந்த ராஷ்மிகா மந்தனா - எங்கு தெரியுமா?
இத்தாலியில் நடைபெற்றுவரும் ஃபேஷன் ஷோவில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா கருப்பு உடையில் சிக்கென இருந்தார்.
இத்தாலியில் நடைபெற்று வரும் மிலன் ஃபேஷன் வீக்கில் நடிகை ராஷ்மிகா மந்தனா முழு கருப்பு நிற உடையில் தோன்றி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு சில படங்களைப் பகிர்ந்து கொண்டார்.
ரன்பீர் கபூர் நடித்த ’அனிமல்’ படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து பாலிவுட்டில் பிரபலம் ஆனார். இப்போது இவர் பிப்ரவரி 21ஆம் தேதி, உலகளாவிய பேஷன் அரங்கில் தோன்றி, கவனத்தை ஈர்த்து வருகிறார். இத்தாலியின் மிலன் நகரில் நடந்த பேஷன் ஷோவில் மிகவும் ஒரு நேர்த்தியான கருப்பு உடையில், கருப்பு ஷூ அணிந்து மிடுக்காக தோன்றினார். அப்போது எடுத்த படங்களை, இன்ஸ்டாகிராம் கதைகளில் பகிர்ந்துகொண்டார்.
பிப்ரவரி 20 முதல் 26 வரை நடைபெறும் மிலன் ஃபேஷன் வீக் 2024 நிகழ்ச்சி நடைபெறுகிறது. மிலன் ஃபேஷன் வீக்கில் ராஷ்மிகா மந்தனா நீண்ட கருப்பு கோட் கொண்ட கருப்பு நிற ஆடை அணிந்திருந்தார்.
தனது ஒரு படத்தைப் பகிர்ந்து, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் "மிலன் ஒரு நிமிடம்" என்று கேப்ஷன் எழுதியுள்ளார். ஃபேஷன் ஷோவில் தனது தலைமுடி மற்றும் ஒப்பனைக் குழுவைப் பற்றியும், பேஷன் ஷோவில் மாடல்கள் நடந்து செல்லும் காட்சியையும் ராஷ்மிகா மந்தனா பகிர்ந்து கொண்டார். மேலும், 'மிலானோ' தெருக்களில் தான் போஸ் கொடுக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்:
ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் மும்பையில் இருந்து ஹைதராபாத் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 'மரணத்திலிருந்து தப்பியதாக' கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை ராஷ்மிகா பகிர்ந்தார்.
அதற்கு விமான நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, நடிகை ராஷ்மிகா மந்தனாவின் விமானம் 'தொழில்நுட்பக் கோளாறு' காரணமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தது.
ராஷ்மிகாவின் அடுத்தடுத்த படங்கள்:
ராஷ்மிகா தனது அதிரடி படமான ’அனிமல்’ படத்தின் வெற்றியால், இந்தியில் உச்ச நடிகை அந்தஸ்தினைப் பெற்றுள்ளார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இப்படத்தில் ரன்பீர் கபூர், பாபி தியோல் மற்றும் அனில் கபூர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிமல், 2023ஆம் ஆண்டின் மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்றாகும்.
ராஷ்மிகா விரைவில் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா: தி ரூல் என்ற பெயரில் புஷ்பா படத்தின் பாகம் 2-ல் நடிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9