Rashmika Mandanna: இப்பவே ரிட்டையர் ஆன கூட ஓகே தான்.. வீல் சேரில் வந்த ராஷ்மிகா பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி
Rashmika Mandanna: காலில் காயமடைந்த ராஷ்மிகா வீல் சேரில் வந்து புதிய பாலிவுட் படத்தின் புரொமோஷனில் கலந்து கொண்டார். அத்துடன் சினிமாவில் ரிட்டையர் ஆனால் கூட ஒகே தான் என அவர் பேசியது அதிர்ச்சியில் ஆழ்த்தியது

நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, இந்தி, தமிழ் படங்களில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். இவரது லேட்டஸ்ட் ரிலீஸான புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.
இதையடுத்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது காலில் காயமடைந்தார் ராஷ்மிகா. இதுபற்றி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்த அவர், தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக நடிப்பில் இருந்து குட்டி பிரேக் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சாவா என்ற படத்தின் புரொமோஷனுக்காக மும்பை சென்று ராஷ்மிகா, விமான நிலையத்தில் வீல் சேரில் வந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ரிட்டையர் ஆனால் சந்தோஷம்
இதை.யடுத்து சாவா படத்தின் நிகழ்ச்சியில் ராஷ்மிகா பேசும்போது, "என் வாழ்க்கையில் இதுபோன்றதொரு படத்தில் நடிக்க தான் வேண்டி விரும்பி காத்திருந்தேன். இயக்குநர் லக்ஷ்மண் சாரிடம் பேசியபோது, இந்த படத்துடன் ரிட்டையர் ஆனால் கூட சந்தோஷம் என உணர்வதாக சொன்னேன்.
படத்தில் விக்கி என்ன செய்துள்ளார் என்பதை பார்க்கையில் நம்பமுடியாத விஷயமாக உள்ளது என்றே கூறலாம். அவர் பார்ப்பதற்கு கடவுள் போல் இருக்கிறார்" என்றார்.
பான் இந்தியா அளவில் டாப் நடிகையாக இருந்து ராஷ்மிகா, திடீரென ரிட்டையர் ஆன ஒகே தான் என்று பேசியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முகமுடி அணிந்து வீல் சேரில் பயணம்
ராஷ்மிகா எப்போது விமான நிலையம் வந்தாலும், அவரை சூழ்ந்து ஏராளமான போட்டோகிராபர்கள் நின்று கொண்டு புகைப்படங்களை கிளிக்க தள்ளுவார்கள். அதேபோல் பத்திரிகையாளர்களை பார்த்து சிரித்த முகத்துடன் ஹாய், பாய் சொல்வதும், நலம் விசாரிப்பதுமாக இருப்பார் ராஷ்மிகா.
விமான நிலையத்தில் வரும்போதும், செல்லும்போது ரசிகர்கள் யாரும் குறுக்கிட்டாலும் அவர்களுக்கு புன்னகை ததும்பிய முகத்துடன் பேசுவது, தேவைப்பட்டால் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகவும் இருந்து வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், காலில் ஏற்பட்ட காயத்தால் நடக்க கூட முடியாத ராஷ்மிகா விமான நிலையத்தில் காரில் இருந்து இறங்கி, ஒற்றைக் காலில் நடக்க சிரமப்பட்டார்.
காயம்பட்ட காலுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்க அவர், முயற்சி செய்தார். அப்போது உதவியாளர் சக்கர நாற்காலியை எடுத்து ராஷ்மிகாவுக்கு வழங்கினார். இதன் பின்னர் அதில் அமர்ந்து ராஷ்மிகா புறப்பட்டார்.
ராஷ்மிகாவை அடையாளம் காண முடியாதபடி முகத்தில் முகமூடி மற்றும் தொப்பி அணிந்திருந்த நிலையில் உதவியாளர்களால் அழைத்து செல்லப்பட்டார். அவரது வலது காலில் இருந்த காயத்துக்கான கட்டு பெரிதாக கட்டப்பட்டிருந்தது.
சாவா திரைப்படம்
மராட்டிய மகாராஜா சத்ரபதி சம்பாஜி மகாராஜ், வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட சாவா என்ற மராத்தி மொழி நாவலின் தழுவலாக அதே பெயரில் சாவா படம் உருவாகியுள்ளது. வரலாற்று ஆக்ஷன் திரைப்படமான இதில் விக்கி கெளசால் ஹீரோவாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, லக்ஷ்மண் உடேகர் இயக்கியுள்ளார். பாலிவுட்டினரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்கு வருகிறது.
ராஷ்மிகாவின் புதிய படங்கள்
இந்த ஆண்டில் சாவா, சிக்கந்தர், தாமா ஆகிய பாலிவுட் படங்களிலும் , தி கேர்ள்பிரண்ட் என்ற தெலுங்கு படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகும் குபேரா படத்திலும் நடித்து வருகிறார்.
இதில் சிக்கந்தர் படத்தில் சல்மான் கான், காஜல் அகர்வால், சத்யராஜ் ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார் ராஷ்மிகா. படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார்.

தொடர்புடையை செய்திகள்