Rashmika Mandanna: ‘அவங்க மட்டும் இல்லன்னா நான் இப்படி இருக்கவே.. ஒரு நொடியில எல்லாமே போயிடும்ங்க’ - ராஷ்மிகா
Rashmika Mandanna: நாம் அனுபவிக்கும் இந்த ஆடம்பரம், நாம் ஆசைப்பட்டு வைத்திருக்கும் விஷயங்கள் அனைத்தும் இருக்கலாம் அல்லது ஒரு நொடியில் காணாமல் போகலாம். இந்த எண்ணம்தான் என்னை பணிவாகவும், என்னுடைய அடிப்படை என்னவோ அதனுடன் ஒன்றிணைத்தும்வைத்திருக்கிறது. - ராஷ்மிகா மந்தனா

பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தான் இவ்வளவு பெரிய அந்தஸ்தை பெற்றிருந்த போதும், பணிவாக இருக்க வேண்டிய அவசியம் குறித்து பேசி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, கடந்த 9 வருடங்களில் ‘கீதா கோவிந்தம்’, ‘ சீதா ராமம்’, ‘அனிமல்’, ‘புஷ்பா’, ‘புஷ்பா 2’ உள்ளிட்ட படங்களின் வெற்றியின் வழியாக மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்று இருக்கிறார். இவர் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் ஏன் பணிவாக இருக்க வேண்டும் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
என்னுடைய இலக்கு
அதில் அவர், ‘ என்னுடைய இலக்கு பெரிய ஸ்டாராக மாறுவதை தாண்டி, மக்கள் முகத்தில் சிரிப்பை வரவழைப்பதே அதிர்ஷ்டவசமாக, நான் அதற்காக தனியாக மெனக்கெட வேண்டிய அவசியம் கிடையாது. காரணம், என்னுடைய மூளை ஏற்கனவே அந்த பாதையில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறது.
ஒரு நொடியில் காணாமல் போய்விடும்
நாம் அனுபவிக்கும் இந்த ஆடம்பரம், நாம் ஆசைப்பட்டு வைத்திருக்கும் விஷயங்கள் அனைத்தும் இருக்கலாம் அல்லது ஒரு நொடியில் காணாமல் போகலாம். இந்த எண்ணம்தான் என்னை பணிவாகவும், என்னுடைய அடிப்படை என்னவோ அதனுடன் ஒன்றிணைத்தும்வைத்திருக்கிறது.
அவர்கள் அடித்தளமாக இதனைதான் நம்புகிறார்கள்
என் வாழ்க்கையில் இடம் பெற்ற நபர்கள் சரியானவர்கள்; அனைவருமே இதனைதான் நம்புகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பணிவின் மீது பெரு நம்பிக்கை இருக்கிறது. இது என் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கை வகித்து இருக்கிறது. இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நபர்கள் என்னைச் சுற்றி இருந்த காரணத்தால், தற்போது நான் நல்ல இடத்தில் இருக்கிறேன்.’ என்று பேசினார்.
ஜாவா பட புரொமோஷன்
அண்மையில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது ராஷ்மிகாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்த அவர், தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக நடிப்பில் இருந்து குட்டி பிரேக் எடுத்துள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஜாவா என்ற படத்தின் புரொமோஷனுக்காக மும்பை சென்ற ராஷ்மிகா, விமான நிலையத்தில் வீல் சேரில் வந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ரிட்டையர் ஆனால் சந்தோஷம்
ஜாவா படத்தின் நிகழ்ச்சியில் ராஷ்மிகா பேசியபோது, "என் வாழ்க்கையில் இதுபோன்றதொரு படத்தில் நடிக்க தான் வேண்டி விரும்பி காத்திருந்தேன்.
இயக்குநர் லக்ஷ்மண் சாரிடம் பேசியபோது, இந்த படத்துடன் ரிட்டையர் ஆனால் கூட சந்தோஷம் என உணர்வதாக சொன்னேன். படத்தில் விக்கி என்ன செய்துள்ளார் என்பதை பார்க்கையில் நம்பமுடியாத விஷயமாக உள்ளது என்றே கூறலாம். அவர் பார்ப்பதற்கு கடவுள் போல் இருக்கிறார்" என்றார்.
நடிகை ராஷ்மிகா தற்போது ஹிந்தியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைக் கதையில் மகாராணி யேசுபாயாக நடித்துள்ளார். விக்கி கெளசல் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படம் பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இதுபோக ஹிந்தியில் சல்மான்கானின் சிக்கந்தர், தாமா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் ‘குபேரா’, ‘தி கேர்ள் ஃப்ரண்ட்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

டாபிக்ஸ்