Rashmika Mandanna: ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட காயம்.. தள்ளிப்போன படப்பிடிப்பு.. நடந்தது என்ன?
Rashmika Mandanna Injury: ஜிம்மில் வழக்கமாக உடற்பயிற்சி மேற்கொண்டபோது எதிர்பாராத விதமாக காயமடைந்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதன் காரணமாக அவர் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாள் தள்ளிபோயுள்ளது.

நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனா தென்னிந்தியா சினிமா, பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அனிமல், புஷ்பா 2 என இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்த ஹிட்டாகியிருக்கும் நிலையில் குஷியில் இருந்து வருகிறார். அத்துடன் தனுஷுடன் குபேரா, பாலிவுட் படமான சிக்கந்தர் என ராஷ்மிகா நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக இருக்கின்றன.
ஜிம்மில் ராஷ்மிகாவுக்கு காயம்
பிட்னஸ் மீது அதிக அக்கறை கொண்டவராக இருந்து வரும் ராஷ்மிகா, அவ்வப்போது ஜிம்மில் மேற்கொள்ளும் பல்வேறு உடற்பயிற்சி விடியோக்களை தனது சமூக வலைத்தளபக்கித்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதையடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டபோது நடிகை ராஷ்மிகா எதிர்பாராத விதமாக காயமடைந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் ஷுட்டிங்கில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருக்கும் ராஷ்மிகா, தற்போது நடித்து வரும் படத்தில் இருந்து ப்ரேக் எடுத்துள்ளார். அவரை காயம் ஏற்பட்ட போதிலும், உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நடிகைக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.