Rashmika Mandanna: 'என்னதான் பெரிய நடிகையானாலும் இது என் துரிதிஷ்டமாக போனது..' - ராஷ்மிகா வருத்தம்
Rashmika Mandanna: நான் என்ன தான் பெரிய நடிகையாக இருந்தாலும் இதெல்லாம் துரிதிஷ்டமாக நடந்துள்ளது என ராஷ்மிகா மந்தனா வருத்தம் தெரிவித்தார்.

Rashmika Mandanna:தற்போது இளைஞர்கள் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக அறியப்படும் ராஷ்மிகா மந்தனா, 2016 ஆம் ஆண்டு கன்னடப் படமான கிரிக் பார்ட்டி மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதிலிருந்து ரஷ்மிகா மந்தனாவின் வாழ்க்கை மெல்ல மெல்ல மேல்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
டாப் கியரில் ராஷ்மிகா
அதன்பிறகு, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற பெரிய நடிகர்களுடனும், தமிழில் விஜய், தனுஷ், கார்த்தி போன்ற நடிகர்களுடனும் பாலிவுட்டில் ரன்வீர் கபூர், சல்மான் கானுடனும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் ஃபெமினா மீடியாவிடம் பேசிய ராஷ்மிகா தான் தன் கெரியரில் முன்னேற தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு தியாகம் செய்ய வேண்டியிருந்தது என்பதைப் பற்றிப் பேசினார்.
வெற்றிக்காக தியாகம்
ராஷ்மிகா அந்தப் பேட்டியில், வெற்றிக்காக குடும்ப நேரத்தை தியாகம் செய்ய வேண்டியிருந்ததாகக் கூறினார். எனது குடும்பத்துடன் போதுமான நேரத்தைச் செலவிட எனக்கு நேரம் கிடைக்கவில்லை, அதுவே எனது பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய சமரசம்.
நான் வளர்ந்து வந்தபோது, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமமாக வைத்திருக்க முடியாது என்று என் அம்மா எப்போதும் என்னிடம் சொல்வார். ஒன்றை மற்றொன்றுக்காக தியாகம் செய்ய வேண்டியிருக்கும். துரதிர்ஷ்டவசமாக, எனது விதி என்னை எனது தொழில்முறை உறுதிப்பாடுகளுக்காக குடும்ப நேரத்தை தியாகம் செய்ய வழிவகுத்தது.”
இதை தவறவிட்டுவிட்டேன்
என்ன தான் எனக்கு தூரம் இருந்தாலும், எனது குடும்பம் குறிப்பாக எனது தங்கை தான் என் ‘நங்கூரம்’ என்றார். ஆனால், நான் அவளின் வளர்ச்சியைப் பார்க்கத் தவறவிட்டேன் என்றும் வருந்தினார். இது எவ்வளவு கடினமானது என்று விவரிப்பது கஷ்டம் என்றும் கூறினார்.
“என் தங்கையும் நானும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் செய்தி அனுப்புகிறோம். நான் அவளை மிகவும் மிஸ் செய்கிறேன். முடிந்த போதெல்லாம் என் அம்மா, அப்பா மற்றும் தங்கைக்கு போன் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அவள் ஒரு புத்திசாலிப் பெண் என்று எனக்குத் தெரியும். அவள் ஒரு அற்புதமான பெண்ணாக வளர்வாள். நான் எப்போதும் அவளைப் பற்றி பெருமைப்படுவேன்” எனக் கூறினார்.
சினிமாவிற்கு குட்டி பிரேக்
அண்மையில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது ராஷ்மிகாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்த அவர், தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக நடிப்பில் இருந்து குட்டி பிரேக் எடுத்துள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஜாவா என்ற படத்தின் புரொமோஷனுக்காக மும்பை சென்ற ராஷ்மிகா, விமான நிலையத்தில் வீல் சேரில் வந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ரிட்டையர் ஆனால் சந்தோஷம்
சாவா படத்தின் நிகழ்ச்சியில் ராஷ்மிகா பேசியபோது, "என் வாழ்க்கையில் இதுபோன்றதொரு படத்தில் நடிக்க தான் வேண்டி விரும்பி காத்திருந்தேன். இப்படத்தின் இயக்குநர் லக்ஷ்மண் சாரிடம் பேசியபோது, இந்த படத்துடன் ரிட்டையர் ஆனால் கூட சந்தோஷமாக உணர்வதாக சொன்னேன் எனவும் கூறி இருந்தார்.
ரஷ்மிகாவின் வரவிருக்கும் படங்கள்
ரஷ்மிகா கடைசியாக 2023 ஆம் ஆண்டு வெளியான சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் படத்தில் ரன்பீர் கபூருடனும், 2024 ஆம் ஆண்டு வெளியான சுகுமாரின் புஷ்பா 2: தி ரூல் படத்தில் அல்லு அர்ஜுனுடனும் நடித்திருந்தார். இவ்விரு படங்களிலும் அவரது நடிப்பு பாராட்டை பெற்றதுடன் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து ராஷ்மிகாவின் தெலுங்குப் படமான தி கேர்ள்ஃப்ரெண்ட், மற்றும் தனுஷூடன் நடித்து வரும் குபேரா படமும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அதுமட்டுமின்றி ராஷ்மிகா மந்தனா சாவா, சிக்கந்தர் மற்றும் தமா ஆகிய இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். இதில் சாவா படம் பிப்ரவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்