‘எல்லாத்துக்கிட்டேயும் சாம்பல் கேரக்டர் இருக்கு.. படத்த படமா பாருங்க’ -ராஷ்மிகா ஓப்பன் டாக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘எல்லாத்துக்கிட்டேயும் சாம்பல் கேரக்டர் இருக்கு.. படத்த படமா பாருங்க’ -ராஷ்மிகா ஓப்பன் டாக்

‘எல்லாத்துக்கிட்டேயும் சாம்பல் கேரக்டர் இருக்கு.. படத்த படமா பாருங்க’ -ராஷ்மிகா ஓப்பன் டாக்

HT Tamil HT Tamil Published Jul 01, 2025 10:42 AM IST
HT Tamil HT Tamil
Published Jul 01, 2025 10:42 AM IST

அனிமல் படம் மீதான விமர்சனங்களுக்கு ராஷ்மிகா மீண்டும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

‘எல்லாத்துக்கிட்டேயும் சாம்பல் கேரக்டர் இருக்கு.. படத்த படமா பாருங்க’ -ராஷ்மிகா ஓப்பன் டாக்
‘எல்லாத்துக்கிட்டேயும் சாம்பல் கேரக்டர் இருக்கு.. படத்த படமா பாருங்க’ -ராஷ்மிகா ஓப்பன் டாக்

ஆனால், அதையெல்லாம் அனிமல் திரைப்படம் முறியடித்து பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இந்த நிலையில் அண்மையில் ராஷ்மிகா கொடுத்த பேட்டி ஒன்றில், அவர் படம் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

படத்தை படமாக பாருங்கள்

அவர் பேசும் போது, "நான் படத்தை ஒரு படமாக பார்த்தேன். ஒரு ஹீரோ திரையில் சிகரெட் பிடிக்கும் போது அவர் படம் பார்ப்பவர்களையும் புகைக்கத்தூண்டுகிறார் என்று சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு புகை பிடிப்பது சமூகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது.

நான் எந்த வகையிலும் பாதிக்கப்படுவதற்காக ஒரு படத்தைப் பார்க்கப் போவதில்லை. தனிப்பட்ட முறையில், நான் ஒருபோதும் திரையில் புகைபிடிக்க மாட்டேன். ஒரு வேளை படத்தின் தாக்கத்துக்கு ஆளாகும் நபராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு ஏற்ற மாதிரியான படங்களைப் பாருங்கள். யாரும் யாரையும் படம் பார்க்க வற்புறுத்தவில்லை. அப்படி இருந்தால் ஒவ்வொரு படமும் பிளாக்பஸ்டராக மாறி இருக்கும்.

சாம்பல் எல்லோரிடம் இருக்கிறது.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் சாம்பல் (நல்லதும் கெட்டதும் நிறைந்த குணம்) நிற கதாபாத்திரங்கள் உள்ளன. நாம் ஒருபோதும் கருப்பு அல்லது வெள்ளை அல்ல. நம் அனைவருக்குள்ளும் சாம்பல் நிறம் இருக்கிறது.

சந்தீப் ரெட்டி வங்கா ஒரு குழப்பமான கதாபாத்திரத்தைப் பற்றி படத்தில் பேசினார். அவ்வளவுதான். உண்மையில் ஒரு படத்தை அது என்னவென்று பார்க்க வேண்டும். இந்த கதாபாத்திரங்களில் நடித்ததை வைத்து ஒரு நடிகரை மதிப்பிடக்கூடாது. நடிகர்கள் வெறுமனே திரையில் நடிக்கிறார்கள். அவர்களின் உண்மையான ஆளுமைகள் அவர்கள் சித்தரிக்கும் கதாபாத்திரங்களிலிருந்து வேறுபட்டவை’ என்று பேசினார்.