Rashmika Mandanna: என்னை கவர்ந்த ஆண்.. சிறந்த பார்ட்னர்.. ரிலேஷன்ஷிப்பை உறுதிப்படுத்திய ராஷ்மிகா
Actress Rashmika Mandanna: என்னை கவர்ந்த ஆணின் சிறந்த பார்ட்னராக உள்ளேன் என தனது ரிலேஷன்ஷிப் குறித்து உறுதிபடுத்தியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா.

நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது காலில் காயமடைந்த நிலையில் படப்பிடிப்புகளில் இருந்து குட்டி பிரேக் எடுத்தார். தன்னால் முழுமையாக நடக்க முடியாதபோதிலும் காலில் காயத்துடன் கட்டு போட்டுக்கொண்டு வீல் சேரில் தனது புதிய படமா சாவா புரொமோஷனில் கலந்து கொண்டார். ராஷ்மிகாவின் இந்த அர்பணிப்பை ரசிகர்களை மட்டுமன்றி திரையுலகினரும் வியந்து பாராட்டினர்.
இதையடுத்து தனக்கு, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு இடையிலான ரிலேஷன்ஷிப்பை உறுதிபடுத்தியுள்ளார் நடிகை ராஷ்மிகா. பிரபல ஊடகமான ஹாலிவுட் ரிப்போர்டருக்கு பேட்டியளித்தார் நடிகை ராஷ்மிகா. அப்போது, ஒரு ஆணிடம் தான் விரும்பு குணாதிசயங்கள் பற்றி பேசிய அவர், அப்படியொரு நபருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார். அந்த ஆண் விஜய் தேவரகொண்டா தான் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்.
ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன்
இதுகுறித்து நடிகை கூறியதாவது, "எனக்கு மகிழ்ச்சியான இடம் என்றால் எப்போதுமே என் வீடு தான். அங்கு நான் நங்கூரமிட்டு இருப்பதாக உணர வைக்கிறது. வேரூன்றி இருப்பதை உணர வைக்கிறது.
வெற்றி என்பது வந்து போகக்கூடிய விஷயம் தானே தவிர ஆனால் அது என்றைக்கும் நிரந்தரமானது இல்லை. ஆனால் வீடு என்றென்றும் நம்முடனே இருக்கும். அதனால், நான் அந்த இடத்திலிருந்து வேலை செய்வதை விரும்புகிறேன்.
எனக்குக் கிடைக்கும் அன்பு, இந்தப் புகழ், வெளிச்சம் போன்றவற்றை காட்டிலும் நான் ஒரு சிறந்த மகள், சகோதரி, பார்ட்னர் என்பதை தான் உணர்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை கொடுக்கிறேன். எனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டும் சிறப்பாக வாழ்ந்து வருகிறேன்" என தனது வாழ்க்கை குறித்து எமோஷனலாக பேசினார்.
தொடர்ந்து அவரிடம் ஒரு ஆணிடம் நீங்கள் கவரக்கூடிய விஷயங்கள் என்ன என கேட்டபோது, "கண்கள் ஒருவரின் ஆன்மாவின் ஜன்னல் என்று அவர்கள் கூறுகிறார்கள். நான் அதை நம்புகிறேன். நான் சிரித்துக் கொண்டே இருக்கிறேன், அதனால் சிரித்த முகம் கொண்டவர்களால் வெகுவாக ஈர்க்கப்படுகிறேன். தன்னை சுற்றி இருக்கும் மக்களை மதிக்கும் ஒருவர், அவர் யாராக இருந்தாலும் சரி என கூறினார்.
நான் சிங்கிளாக இல்லை
கீதா கோவிந்தம், டியர் காமரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக மாறிய தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஆகியோர் அவ்வப்போது ரியல் லைஃப்பிலும் பல பொது இடங்களில் ஜோடியாக தலை காட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையாக விஜய் தேவரகொண்டா பேமியுடன் கொண்டாடியுள்ளார் ராஷ்மிகா. அதன் பிறகு அவரது குடும்பத்தினருடன் இணைந்து புஷ்பா 2 படத்தை பார்த்துள்ளார். அந்த நேரத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் தேவரகொண்டா, " எனக்கு 35 வயதாகிறது. நான் இன்னும் சிங்கிளாக இருப்பேன் என நினைக்கிறீர்களா? எனது காதல் வாழ்க்கை குறித்து சரியான நேரத்தில் எடுத்துரைப்பேன். குறிப்பாக அழுத்தம் ஏற்படும் போது கண்டிப்பாக சொல்லமாட்டேன் என்றார்.
விஜய் தேவரகொண்டாவின் இந்த பேட்டிக்கு பிறகு ராஷ்மிகாவுடன் ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படமும் வெளியாகி வைரலானது. தற்போது ராஷ்மிகாவும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளார். இதன்மூலம் ராஷ்மிகா பெயர் குறிப்பிடாமல் இருக்கும் அந்த நபர் விஜய் தேவரகொண்டாவாக தான் இருக்ககூடும் என பரபரப்பாக பேசப்படுகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்