விஜய் தேவரகொண்டாவுடன் ஒரே காரில் ராஷ்மிகா மந்தனா.. காதல் உறுதி ஆகுதா? கல்யாணத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜய் தேவரகொண்டாவுடன் ஒரே காரில் ராஷ்மிகா மந்தனா.. காதல் உறுதி ஆகுதா? கல்யாணத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்..

விஜய் தேவரகொண்டாவுடன் ஒரே காரில் ராஷ்மிகா மந்தனா.. காதல் உறுதி ஆகுதா? கல்யாணத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்..

Malavica Natarajan HT Tamil
Published Jun 18, 2025 10:19 AM IST

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா மும்பை விமான நிலையத்திலிருந்து ஒன்றாக வெளியே வந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.

Rashmika and Vijay have long been rumoured to be dating. In 2024, they admitted to being in a relationship but did not name their partners.
Rashmika and Vijay have long been rumoured to be dating. In 2024, they admitted to being in a relationship but did not name their partners.

ஒரே காரில் ராஷ்மிகா, விஜய்

மும்பை விமான நிலையத்தில் இருந்து வந்த அவர்கள் இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர். இந்த சமீபத்திய நிகழ்வு அவர்களின் உறவு குறித்த ஊகங்களுக்கு மீண்டும் ஒருமுறை பற்ற வைத்துள்ளது. ரசிகர்கள் அவர்கள் டேட்டிங் செய்கிறார்களா இல்லையா என்று ஆவலுடன் யோசித்து வருகின்றனர்?

சுற்றி வளைத்த நெட்டிசன்கள்

விஜய் மற்றும் ராஷ்மிகா இன்று புதன்கிழமை ஜூன் 18 ஆம் தேதி அதிகாலையில் மும்பை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் ஒரே காரில் வெளியேறுவதையும் காண முடிந்தது. இருவரும் முகமூடிகள் அணிந்து தங்கள் முகங்களை ஓரளவு மறைத்திருந்தனர். அப்போது, அவர்களை காரின் பின்புறத்தில் அமர்ந்திருக்கும்போது சிலர் படம் பிடித்தனர்.

பின் சிறிது நேரம் கழித்து, அவர்களின் கார் புறப்பட்டது, ஆனால் கேமராக்கள் ஏற்கனவே அவர்கள் குறித்த வதந்தியை பரப்ப ஆரம்பித்து விட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் தங்கள் ரிலேஷன்சிப் குறித்த தகவல்களை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க விரும்பியது போல் தோன்றுகிறது. ஆனால், தொடர்ந்து வெளியாகும் புகைப்படங்கள் அதனை உடைத்து வருகின்றன.

கல்யாணத்தை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரின் உறவின் நிலை குறித்து ஆவலுடன் யோசித்து வருகின்றனர். "அவர்கள் அதை அதிகாரப்பூர்வமாக்குகிறார்களா," என்று ஒரு சமூக ஊடக பயனர் ஆச்சரியப்பட்டார், மற்றொருவர், "நாங்கள் அவர்களின் திருமணத்திற்காக காத்திருக்கிறோம்" என்று எழுதினார். "அழகான ஜோடி," என்று ஒரு கருத்து தெரிவித்தார். மற்றொருவர், "திருமணத்திற்காக காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

விஜய் மற்றும் ராஷ்மிகாவின் உறவு

ராஷ்மிகா மற்றும் விஜய் நீண்ட காலமாக டேட்டிங் செய்வதாக வதந்தி பரவி வருகிறது. 2024 ஆம் ஆண்டில், ராஷ்மிகா மற்றும் விஜய் இருவரும் உறவில் இருப்பதாக ஒப்புக்கொண்டனர், ஆனால் தங்கள் துணையின் பெயரை குறிப்பிடவில்லை. அவர்கள் 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் மற்றும் 2019 ஆம் ஆண்டு வெளியான டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்ததிலிருந்து டேட்டிங் செய்வதாக வதந்தி பரவி வருகிறது. அவர்கள் அடிக்கடி ஒன்றாக நேரத்தை செலவிடுவதைக் காண முடிகிறது.

விஜய் குடும்பத்தோடு உறவு

ராஷ்மிகா பெரும்பாலும் விஜய்யின் வீட்டிலிருந்து படங்களைப் பகிர்ந்து கொள்கிறார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொள்கிறார். கடந்த ஆண்டு, ராஷ்மிகா தனது பிளாக்பஸ்டர் திரைப்படமான புஷ்பா 2: தி ரூலை விஜய்யின் குடும்பத்துடன் ஒரு திரையரங்கில் பார்த்தார். ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு ராஷ்மிகா மற்றும் விஜய் இருவரும் ஒரே இடத்திலிருந்து படங்களை வெளியிட்டதைக் கண்ட ரசிகர்கள், அவர்கள் ஒன்றாகக் கொண்டாடியதாக ஊகிக்க வழிவகுத்தது.

ராஷ்மிகா மற்றும் விஜய்யின் படங்கள்

ராஷ்மிகா சேகர் கம்முலா இயக்கும் குபேரா படத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்துள்ளார். குபேரா வரும் ஜூன் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அவர் நடித்த தாமா மற்றும் தி கேர்ள்ஃபிரெண்ட் ஆகிய படங்கலும் அடுத்ததடுத்து வெளியாக உள்ளது. இதற்கிடையில், விஜய் நடித்துள்ள கிங்டம் படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. கௌதம் தின்னனூரி எழுதி இயக்கியுள்ள இந்த தெலுங்கு உளவு திரில்லர் படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் சத்யதேவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.