Ranbir Kisses Alia: ஃபிலிம்பேர் மேடையில் அனிமல் பாடல் - ஆலியா பட்டை முத்தமிட்ட ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோர் ஃபிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகர்களுக்கான விருதுகளை வென்றனர். இந்த நிகழ்ச்சியில் அவர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோர் இணைந்து ஃபிலிம்பேர் விருதுகளில் நடனமாடியது வைரல் ஆகியுள்ளது. ரன்பீரின் அனிமல் படத்தின் ஜமால் குடு பாடலுக்கு அவர்கள் ஒன்றாக நடனமாடியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அவர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடனமாடியது மட்டுமல்லாமல், ரன்பீர் கபூர் ஆலியாவை முத்தமிட்டார்.
ரன்பீர் கபூர் ஃபிலிம்பேர் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். அங்கு அவரது சமீபத்திய வெற்றிப் படமான அனிமல் படத்திலிருந்து ஜமால் குடு பாடலுக்கு நடனமாடினார். பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஆலியா பட்,மேடை ஏறி வந்து, அவருடன் சேர்ந்துகொண்டு புன்னகைத்தபடி நடனமாடினார்.
ஆலியாவை முத்தமிட்ட ரன்பீர் கபூர்:
ரன்பீர் அவர்களின் நடனத்தின் முடிவில் ஆலியாவின் கன்னத்தில் ஒரு இனிமையான முத்தத்தை வைத்தார். ஆலியா ஒரு பழுப்பு நிறப் புடவையில் அழகாக இருந்தார். கருப்பு நிற சூட்டில் சந்தான பிளேசரில் ஃபிலிம்பேர் விழா மேடையில் இருந்தார், ரன்பீர் கபூர்.
ஃபிலிம்பேர் விருதுகள்
ரன்பீர் மற்றும் ஆலியா சிறந்த நடிகருக்கான, ஃபிலிம்பேரில் விருதுகளைப் பெற்றனர். அனிமல் படத்தில் நடித்ததற்காக ரன்பீர் சிறந்த நடிகருக்கான விருதையும், ’ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தில் நடித்ததற்காக சிறந்த முன்னணி நடிகருக்கான விருதையும் வென்றனர்.
ஃபிலிம்பேர் விழா மேடையில் ரன்வீர் கபூர் ஏற்புரையில், ரன்பீர் தனது மறைந்த தந்தை ரிஷி கபூரை அன்புடன் நினைவு கூர்ந்தார். அப்போது பேசிய அவர், ‘’ நான் உங்களை நினைக்கும் ஒவ்வொரு நாளும், நான் உங்களை நினைவில் கொள்கிறேன். உங்களுக்காக நான் உணரும் அனைத்தையும் நடிப்பின் மூலம் செய்ய முயற்சிக்கிறேன். நீங்கள் அமைதியாகவும் ஓய்வாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.
மகள் ரஹா பற்றி ரன்பீர் கபூர்:
மேலும் தனது மகள் ரஹா கபூரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "என் மகள் ரஹா, குறும்புக்காரி. நீங்கள் பிறந்து ஒரு வாரம் கழித்து அனிமல் படத்தில் நடிக்க ஆரம்பித்தேன்.
நீங்கள் பிறந்தபின் வீட்டிற்கு வரும் ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.
அம்மாவும் அப்பாவும் இன்னிக்கு ராத்திரி விளையாட உனக்கு ஒரு கருப்பு லேடி கொண்டு வரப் போறோம். உங்களுடன் ஒவ்வொரு சாகசத்தையும் அனுபவிக்க என்னால் காத்திருக்க முடியாது. ஐ லவ் யூ குறும்பு. நன்றி தாய்மார்களே.. சினிமாவில் பார்க்கலாம்"என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9