திருமதி ஆன பிக் பாஸ் புகழ் நடிகை, மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த ஹீரோ..! இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திருமதி ஆன பிக் பாஸ் புகழ் நடிகை, மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த ஹீரோ..! இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்

திருமதி ஆன பிக் பாஸ் புகழ் நடிகை, மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த ஹீரோ..! இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 08, 2024 11:52 PM IST

திருமதி ஆன பிக் பாஸ் புகழ் நடிகை, மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த ஹீரோ, மார்கெட்டை தக்க வைக்க சிட்டாக பறந்த நடிகை, கங்குவா ரிலீஸுக்கு தடையில்லை உள்பட இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.

திருமதி ஆன பிக் பாஸ் புகழ் நடிகை, மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த ஹீரோ..! இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்
திருமதி ஆன பிக் பாஸ் புகழ் நடிகை, மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த ஹீரோ..! இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்

அமரன் படத்தால் கல்லூரி மாணவனுக்கு ஏற்பட்ட சிக்கல்

சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அமரன். இந்த படத்தில் சாய் பல்லவி துண்டு பேப்பரில், தனது செல்போன் எண்ணை எழுதி மேலே இருந்து கீழே நிற்கும் சிவகார்த்திகேயனுக்கு தூக்கி போடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த எண், பார்வையாளர்களுக்கு தெளிவாக தெரியும்படி உள்ள நிலையில், அதை பார்த்த ரசிகர்கள் அந்த எண்ணுக்கு கால் செய்து வருகின்றனர்.

சாய் பல்லவி எழுதிய எண் சென்னையை சேர்ந்த வாகீசன் என்ற மாணவருக்கு சொந்தமானது என தற்போது தெரியவந்துள்ளது. தீபாவளி முதல், தொடர்ந்து தனக்கு அழைப்பு வந்து கொண்டே இருப்பதாகவும், சாய் பல்லவியின் நடிப்பை பாராட்டி பலர் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதாகவும் வாகீசன் தெரிவித்துள்ளார்.

ட்ரூ காலரிலும், தனது செல்போன் எண்ணின் பெயர் இந்து ரெபேக்கா என்று மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார். தொடர் அழைப்பால், செல்போனை அணைத்து வைத்திருப்பதாகவும், இதனால், முக்கியமான கால்களை தவறவிடும் சூழல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கங்குவா படத்துடன் கார்த்தி பட டீஸர்

சூர்யா நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கங்குவா படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்துடன் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் வா வாத்தியார் படத்தின் டீஸரை வெளியிட உள்ளார்களாம். 1 நிமிடம் 38 விநாடிகள் ஓடிக்கூடிய வகையில் இந்த டீசர் இருப்பதாக கூறப்படுகிறது. வா வாத்தியார் படத்தில் கார்த்தியுடன், கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரணம் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது

அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் பிரபாஸ்

கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த 3 படங்களில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே, இந்த நிறுவனம் தயாரித்து, பிரசாந்த் நீல் இயக்கிய சலார் படத்தில் நடித்திருந்தார். படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானதுடன் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 700 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இதையடுத்து தற்போது சலார் 2 படத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், 2026, 2027, 2028 ஆகிய ஆண்டுகளில் பிரபாஸ் நடிப்பில் மூன்று படங்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஆர்ஜே பாலாஜி நடித்த சொர்க்கவாசல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த சில நாள்களுக்கு முன் ஆர்ஜே பாலாஜி கதையின் நாயகனாக நடித்த சொர்க்க வாசல் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியிருக்கும் இந்த படம் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

கங்குவா படம் ரிலீஸ் சிக்கலுக்கு கிடைத்த தீர்வு

கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தர வேண்டிய கடன் தொகையை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் செலுத்திய நிலையில், படத்தின் ரிலீஸுக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கங்குவா படத்துக்கு சென்சாரும் செய்யப்பட்டிருக்கும் நிலையில், யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் மொத்தம் நீளம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கங்கை நதிக்கரையில் காதலரை கரம் பிடித்த ரம்யா பாண்டியன்

ரசிகர்களால் இடையழகி என்று அழைக்கப்படும் நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் ரிஷிகேஷில் வைத்து நடந்து முடிந்துள்ளது. கங்கை நதிக்கரையில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்க ரம்யா பாண்டியன் - பஞ்சாப்பை சேர்ந்த தொழிலதிபர், யோகா பயிற்சியாளருமான லோவல் தவான் ஆகியோர் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. பிக் பாஸ் புகழ் நடிகையான ரம்யா பாண்டியன் - லோவன் தவான் திருமண வரவேற்பு நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

மார்கெட்டை தக்க வைக்க சிட்டாக பறந்த நடிகை

விஜய் டிவியில் சமீபகாலமாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற மகாநதி சீரியல் நடிகை தனது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள அந்த சீரியலில் இருந்து விலகி சன் டிவிக்கு சென்றுள்ளாராம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் விஜய்- காவேரி ஜோடிக்கு சமீபத்தில் மவுசும் கூடியது. இதை தக்க வைக்க நினைத்த சீரியல் நிர்வாகம், விஜய்யின் முன்னாள் காதலி உயிருடன் இருக்கும் தகவலை தற்போது காவேரியின் பிறந்த நாளன்று அவருக்கு தெரிவிக்க பல முயற்சிகளை செய்து வருவார்.

ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சீரியல் டைரக்டருக்கே ட்விஸ்டு கொடுத்துள்ளார் இந்த சீரியலில் விஜய்யின் காதலி வெண்ணிலா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகையான கண்மனி. சீரியலின் முக்கியமான இந்த கட்டத்தில் அவர் விலகியுள்ளாராம். நடிகை கண்மனிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ராகவி எனும் சீரியலில் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். இதனால் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது

மாடிப்படியில் தவறி விழுந்த விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த கலாச்சார விழாவில் கலந்து கொண்ட போது, மாடிப்படியில் தவறி விழும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. அவர் நடித்திருக்கும் புதிய மியூசிக் விடியோவை புரொமோட் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

ஓடிடியில் வெளியான வேட்டையன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பிய வேட்டையன் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதேபோல் ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கும் தேவரா படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் பிரபல ஓடிடி தளங்களில் 26 படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் வெளியாகின்றன.

பூஜையுடன் தொடங்கிய தனுஷ் புதிய படம்

சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். தனுஷின் 55வது படமாக உருவாகும் அந்த படத்தை D55 என்று அழைக்கும் நிலையில் படம் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.