Ramayanam Serial: சன் டிவியின் பிரமாண்ட பிளான்.. இன்று முதல் வரும் இராமாயணம் சீரியல்!
Ramayanam Serial: மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து இருந்த இராமாயணம் சீரியல் இன்று ( மே 14 ) முதல் 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது.
பழங்கால சமஸ்கிருத காவியாங்களில் ஒன்று, இராமாயணம். இந்த காவியத்தின் கதை கிமு 500 முதல் கிமு 100 வரை நடைபெற்றது.
ராமர் தனது மனைவியின் மீது வைத்திருந்த பற்று, அன்பின் வெளிப்பாடாக அவரது மனைவியை காப்பாற்றும் முயற்சியில் எவ்வாறு வெற்றி பெற்றார், என்பதே இராமாயணம். இதில் தான், கடவுள் விஷ்ணு ராமரின் அவதாரம் தோன்றியது.
அயோத்தியை சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர் குடும்பத்தை சுற்றியே இந்த நூல் ஆகும். இந்த காலக்கட்டத்தில் நமது பழங்கால விஷயங்களை நம் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
’ சீதையின் இதயநாயகன் ‘
அதற்கு ஏற்றார் போல் முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில், இராமாயணம் நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்ப உள்ளது. ’ சீதையின் இதயநாயகன் ‘ என்ற பெயரில் விரைவில் தொடங்க உள்ளது என்ற அறிவிப்பை சன் தொலைக்காட்சி அறிவித்து இருந்தது.
இந்நிலையில் மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து இருந்த இராமாயணம் சீரியல் இன்று ( மே 14 ) முதல் 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது.
மீண்டும் ஒளிபரப்பாகும் இராமாயணம்
ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 'இராமாயணம்’ ஒளிபரப்பானது. தற்போது ஒளிபரப்பாக உள்ள இராமாயணம் அதே தானா? அல்லது மீண்டும் எடுக்கப்பட்டதா என்பது குறித்த அறிவிப்பு இன்னும் தெரியவில்லை.
தற்போது கோடை கால விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் இராமாயணம் கதையை கற்பிக்க ஏகுவாக சன் தொலைக்காட்சி இந்த தொடரை மீண்டும் ஒளிபரப்ப உள்ளது.
கதை பாத்திரங்கள்
இராமாயணம் கதையில் ஏராளமான பாத்திரங்கள் உள்ளன; மிக முக்கியமானவை பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம்.
மன்னன் தசரதன்
இன்றைய உத்தரபிரதேச மாநிலத்தில் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்தியை அரசன் தசரதன் ஆண்டான். அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர் மற்றும் அவரது மூத்த மகன் ராமனை மிகவும் நேசித்தார்.
ராமர்
ராமர் தசரத மன்னரின் மூத்த மகன் மற்றும் அனைவராலும் போற்றப்பட்டவர். அவர் தனது கண்ணியமான இயல்பு மற்றும் அச்சமற்ற அணுகுமுறைக்காக நன்கு அறியப்பட்டவர்.
லக்ஷ்மணன்
லக்ஷ்மணன், தசரத மன்னன் மற்றும் அவனது மூன்றாவது மனைவி, சுமித்ராவின் மகன். அவர் தனது அன்பு சகோதரர் ராமனுடன் ஒரு தனித்துவமான பிணைப்பைக் கொண்டிருந்தார், அவருக்காக எதையும் செய்யும் அளவும் அந்த பிணைப்பு இருந்தது.
சீதா
சீதா, ராஜா ஜனக்கின், மிதிலாவின் ராஜா, மகள் மற்றும் அயோத்தியின் மூத்த இளவரசரான ராமனை மணந்தார்.
இராவணன்
இராவணன் லங்கா இராச்சியத்தின் வலிமைமிக்க அரசன். அவர் சீதையை காட்டில் இருந்து கடத்தினார். பின்னர் ராமனால் கொல்லப்படுகிறார்.
அனுமன்
அஞ்சனியின் மகனான ஹனுமான், ராமரின் பெரிய பக்தர். அவர் புத்திசாலி மற்றும் ராவணனின் தோல்வியில் முக்கிய பங்கு வகித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்