தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ranbir -Vijay Sethupathi: ராமராக நடிக்கும் ரன்பீர்; ராவணனின் தம்பி விபூஷணனாக நடிக்கும் விஜய்சேதுபதி: ராமாயண பட அப்டேட்!

Ranbir -Vijay Sethupathi: ராமராக நடிக்கும் ரன்பீர்; ராவணனின் தம்பி விபூஷணனாக நடிக்கும் விஜய்சேதுபதி: ராமாயண பட அப்டேட்!

Marimuthu M HT Tamil
Apr 04, 2024 09:21 AM IST

Ranbir -Vijay Sethupathi: இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, நிதேஷ் திவாரி எழுதி இயக்கும் ராமாயணம் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து சில காட்சிகள் வைரல் ஆகியுள்ளன.

ராமாயணம் திரைப்படத்தில் நடிக்கும் ரன்பீர் கபூர்
ராமாயணம் திரைப்படத்தில் நடிக்கும் ரன்பீர் கபூர்

ட்ரெண்டிங் செய்திகள்

தயாரிப்பாளர்கள் இதுகுறித்த எல்லா தகவல்களையும் மறைத்து வைத்திருந்த நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் செட்களில் இருந்து எடுக்கப்பட்ட சில படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்து வைரலாகிவிட்டன. 

கசிந்த காட்சிகள் பண்டைய காலத்தை வெளிப்படுத்தும் வகையிலான கட்டடக்கலையை எடுத்துக் காட்டுகின்றன. 

ராமாயணம் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு படங்கள் கசிவு:

அக்ருதி சிங் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்கும் ராமாயணம் படப்பிடிப்பின் செட்களில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களை வெளியிட்டார். அவர் அப்படத்தின் படக்குழுவினராக இருக்கலாம் என நெட்டிசன்கள் நம்புகிறார்கள். 

 லீக்கான ஒரு படத்தில், கட்டுமானத்தில் உள்ள செட்டில் ஏராளமான தூண்கள் மற்றும் மரச் சுவர்கள் இருந்தன. ஒரு கோயிலைப் போன்ற ஒரு குவிமாட அமைப்பும் இருந்தது. அக்ருதி சிங், தனது பதிவுக்கு "ராமாயணப் படப்பிடிப்பின் நாள் 1" என்று தலைப்பிட்டு, அதனைப் பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கவுசாலி என்ற பயனர்பெயருடன் எக்ஸ் தளத்தில் ஒரு நெட்டிசன் பகிர்ந்த மற்றொரு வீடியோவில், பெரிய பெரிய தூண்கள் காணப்படுகின்றன.

பகவான் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர்:

பிப்ரவரி 2024ல், ரன்பீர் கபூர்,  நிதேஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்திற்காக குரல் மற்றும் உச்சரிப்பு பயிற்சிபெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக வெளியான ஒரு ஆதாரப்பூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், "ரன்பீர் கபூர், ஒரு குறிப்பிட்ட பாரிடோன் என்னும் கிளாஸிக்கல் இசையில், பாடல் வரிகளைப் பாடும் பயிற்சியில் இருக்கிறார்.  படத்தில், நீங்கள் கண்களை மூடியிருந்தால், ரன்பீரின் குரலை அடிப்படையாகக் கொண்ட, ராமரின் ஒரு உரையாடலை அடையாளம் காண முடியும். 

'ராமாயணத்தில்' ரன்பீர் கபூர், கடந்த காலத்தில் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து வித்தியாசமான வசன உச்சரிப்பில் பேசவேண்டும் என்பதில், இயக்குநர் நிதேஷ் திவாரி விரும்புகிறார். 

ஒரு பல்துறை நடிகராக, ரன்பீர் கபூர் இருப்பதால், புதிய ஒன்றை முயற்சிக்கும் இந்த செயல்முறையை அனுபவித்து வருகிறார்" என்று இந்தியா டுடே மேற்கோளிட்டுள்ளது.

சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோர் இடம்பெறக்கூடும்

நிதேஷ் திவாரி இயக்கும் இந்த ராமாயணம் படத்தில் சாய் பல்லவி, சீதா தேவியாக நடிக்கிறார். சன்னி தியோல் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று யூகங்கள் பரவி வருகின்றன. 

ஆனால், தயாரிப்பாளர்களிடமிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வரவில்லை. ஆனால், கும்பகர்ணனாக நடிக்க பாபி தியோலை அணுகியுள்ளனர் என்பது தெரிகிறது. மேலும், ராவணனின் தம்பி விபிஷணனாக விஜய் சேதுபதி நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முன்னதாக விஜய்சேதுபதி, மெர்ரி கிறிஸ்துமஸ் என்னும் பன்மொழி படத்தில் நடித்திருந்தார். அதில் காதல், குற்றம் மற்றும் சஸ்பென்ஸ் ஆகியவை இணைந்து உருவாகியிருந்தது. ஸ்ரீராம் ராகவன் இப்படத்தினை இயக்கியிருந்தார். ஜனவரி மாதம் வெளியான இத்திரைப்படம், அதன்பின், நெட் ஃபிளிக்ஸ் இந்தியா ஓடிடி தளத்தில் ரிலீஸானது.

1980-களின் மும்பையில், ஆல்பர்ட் (விஜய்) நகரத்திற்குத் திரும்பி கிறிஸ்துமஸ் இரவினை தனிமையில் கொண்டாடும் மரியா (கத்ரீனா) மற்றும் அவரது குழந்தையை சந்திப்பதை உள்ளடக்கியிருக்கிறது, கதை. இரவு முன்னேறி, இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடும்போது, மரியாவின் பிளாட்டில் ஒரு இறந்த உடலைக் கண்டுபிடிப்பதன் மூலம் கதையில் ஒரு டிவிஸ்ட் கிடைக்கிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை!

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.