Ram Gopal Varma: ஜாமீன் வரமுடியாது.. மூன்று மாசம் ஜெயில்.. செக் பவுன்ஸ் வழக்கில் ராம் கோபால் வர்மாவுக்கு நீதிமன்றம் செக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ram Gopal Varma: ஜாமீன் வரமுடியாது.. மூன்று மாசம் ஜெயில்.. செக் பவுன்ஸ் வழக்கில் ராம் கோபால் வர்மாவுக்கு நீதிமன்றம் செக்

Ram Gopal Varma: ஜாமீன் வரமுடியாது.. மூன்று மாசம் ஜெயில்.. செக் பவுன்ஸ் வழக்கில் ராம் கோபால் வர்மாவுக்கு நீதிமன்றம் செக்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 23, 2025 02:46 PM IST

RGV Jail Sentence: தென் இந்திய சினிமாவின் பிரபல இயக்குநரான ராம் கோபால் வர்மாவுக்கு மும்பை நீதிமன்றம் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2018ஆம் ஆண்டு அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இப்போது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் வரமுடியாது.. மூன்று மாசம் ஜெயில்.. செக் பவுன்ஸ் வழக்கில் ராம் கோபால் வர்மாவுக்கு நீதிமன்றம் செக்
ஜாமீன் வரமுடியாது.. மூன்று மாசம் ஜெயில்.. செக் பவுன்ஸ் வழக்கில் ராம் கோபால் வர்மாவுக்கு நீதிமன்றம் செக்

அடிக்கடி பல்வேறு விதமான செய்திகளில் இவரது பெயர் அடிபட்டு வரும் நிலையில், தற்போது இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு செக் பவுன்ஸ் வழக்கில் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

ராம் கோபல் வர்மாவுக்கு சிறை தண்டனை

கடந்த 2018ஆம் ஆண்டில் தொடரப்பட்ட செக் பவுன்ஸ் வழக்கில் ராம் கோபால் வர்மாவுக்கு சிறைத்தண்டனை. விதிக்கப்பட்டுள்ளது. மகேஷ் சந்திர மிஸ்ரா என்ற நபர் 2018ஆம் ஆண்டு ஸ்ரீ என்ற நிறுவனம் மூலம் இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது செக் பவுன்ஸ் வழக்கைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கடந்த 2022ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அப்போது ரூ. 5 ஆயிரம் பிணை தொகை செலுத்திய நிலையில் ஜாமீன் பெற்றார். கோவிட் காலத்தில் நிதி சிக்கல்களை எதிர்கொண்ட ராம் கோபால் வர்மா, தனக்கு சொந்தமான அலுவலகத்தையும் விற்றார்.

இருப்பினும், கோவிட் காலகட்டத்துக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட இந்த செக் பவுன்ஸ் வழக்கில், அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ராம் கோபால் வர்மா குற்றவாளி என்று தீர்ப்பு அளித்து, மூன்று மாத சிறை தண்டனையுடன், மனுதாரருக்கு ரூ. 3.72 லட்சம் செலுத்த உத்தரவிட்டது.

அவர் அந்தத் தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில், கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் ராம் கோபால் வர்மா மீது ஜாமீனில் வெளிவராத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா தரப்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படாமல் உள்ளது

சினிமா கேரியரில் மிகப்பெரிய படம்

சமீபத்தில் தனது சத்யா படத்தின் ரீ-ரிலீஸின் போது உணர்வுபூர்வமாக பேசிய ராம் கோபால் வர்மா, இனிமேல் ஒரு புதிய வர்மாவைப் பார்ப்பீர்கள் என்று கூறினார். அவர் பேசிய இரண்டு நாள்களுக்குப் பிறகு, தனது எக்ஸ் பக்கத்தில், புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், "எனது சினிமா கேரியரில் மிகப்பெரிய படமாக உருவாக இருக்கும் சிண்டிகேட் படத்தை தயாரிக்க போகிறேன். சத்யா படத்தில் வரும் ஒப்புதல் வாக்குமூலக் குறிப்பின் தொடர்ச்சியாக, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய படத்தை உருவாக்க விரும்புகிறேன். 'மிகவும் பயங்கரமான விலங்கு மனிதன் மட்டுமே'

இந்த படத்தின் பெயர் சிண்டிகேட். இந்தியாவின் இருப்பையே கேள்விக்குள்ளாக்க முயலும் ஒரு அமைப்பைப் பற்றிய படம் இது" என்று அவர் தனது நீண்ட பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இந்த சிண்டிகேட் படம் பூமியில் மனிதனை விட பயங்கரமான விலங்கு எதுவும் இல்லை என்ற செய்தியுடன் தொடங்கும். சிண்டிகேட் படத்தின் குறிக்கோள் இந்தியா நாட்டை ஒரு புதிய இந்தியாவால் மாற்றுவதாகும் என்றும், இது ஒரு திகில் படம். படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.