Game Changer Collection: பாலய்யாவால் திணறும் கேம் சேஞ்சர் வசூல்! தொடர் விடுமுறை கை கொடுக்குமா? நிலவரம் என்ன?
Game Changer Collection:இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் 3வது நாளும் வசூல் மந்தமாக உள்ளது. இந்த படத்திற்கு போட்டியாக மற்றொரு புதிய படமும் வெளியானதால் தெலுங்கு மாநிலங்களில் வசூல் சரியத் தொடங்கியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கும் முதல் நேரடி தெலுங்கு படத்தில் ராம் சரணுடன் கூட்டணி வைத்து உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படம், கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியாகி இந்தியா முழுவதும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இது இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டராக இருக்கும் என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன. ஆனால் நேற்று மற்றும் முந்தைய நாள்களில் வார இறுதி காட்சிகள் தயாரிப்பாளர்களுக்கும், சினிமா ஆர்வலர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
முதல் நாளிலேயே ரூ. 51 கோடி வசூல்
ராம் சரணின் ரசிகர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படத்தை பிரம்மாண்டமாக வரவேற்றனர். முதல் நாளிலேயே நாடு முழுவதும் ரூ.51 கோடியை வசூலித்துள்ளது. ஆனால், சனிக்கிழமை ரூ.21 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.17 கோடியும் மட்டுமே வசூலித்துள்ளது. இதன் மூலம் இப்படம் மூன்று நாட்களில் மொத்தமாக ரூ.89 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் வசூலில் பின்னடைவுக்கு காரணம் விமர்சகர்களிடமிருந்து கலவையான வரவேற்பு மட்டுமல்ல, அதே நேரத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த டக்கு மகாராஜ் வெளியானதும் காராணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் தொடர் விடுமுறை நாட்கள் வர இருக்கிறது. இது ஒரு திருவிழா நேரம் என்பதால் தெலுங்கு மாநிலங்களில் சங்கராந்திக்கு பிறகு படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் வசூல்
உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் படம் ரூ .186 கோடியை ஈட்டியுள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும், அதன் பின்னர் வசூல் குறித்து அவர்கள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த வார இறுதிக்குள் படம் ரூ .250-300 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பார்வையாளர்கள் இரண்டாவது நாளில் 31.19 சதவீதமும், மூன்றாவது நாளில் 29 சதவீதமும் என இருந்தது. ஆனால் பாலகிருஷ்ணாவின் 'தாக்கு மகராஜ்' வெளியான பிறகு, கேம் சேஞ்சரின் படத்தின் எதிர்ப்பார்ப்பு குறைந்ததால் வசூல் மந்தமாக உள்ளது. இது தெலுங்கு பதிப்பிலிருந்து முன்பை விட அதிக வசூல் செய்துள்ளது. இருப்பினும், வெள்ளிக்கிழமைக்கு இதனுடன் ஒப்பிடுகையில் இந்தி பதிப்பின் வசூல் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துள்ளது.
பான் இந்தியா ஸ்டார் டூ வேர்ல்ட் ஸ்டார்
ஆர்.ஆர்.ஆருக்குப் பிறகு ராம் சரண் உலகளாவிய நட்சத்திரமாக மாறி உள்ளார் எனக் கூறலாம். இப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்த காரணத்தால் சரவதேச அளவில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் வட இந்தியாவிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். படத்தில் கதாநாயகியாக நடித்துல்லா கியாரா அத்வானியின் நடிப்பு மற்றொரு பிளஸ் பாயிண்ட். முதல் நாளில் இந்தி பதிப்பு மட்டும் ரூ .41 கோடி வசூலித்தது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.20.5 கோடியை வசூலித்தது. டாகு மகாராஜ் ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. மேலும் தெலுங்கு மாநிலங்களில் ஜனவரி 14, வெங்கடேஷ் நடித்துள்ள சங்கராந்திகி வஸ்துன்னாம் வெளியிடப்படுகிறது. இந்த இரண்டு படங்களையும் வைத்து கேம் சேஞ்சர் எப்படி வசூலிக்கப்போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
கேம் சேஞ்சர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தி கீழ் சுமார் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. தயாரிப்பாளர் தில் ராஜு பிரபல தமிழ் இயக்குனர் எஸ்.ஷங்கர் ஆகியோர் படத்தின் தரத்தை உயர்த்த அதிகம் செலவு செய்துள்ளனர். இப்படத்தில் ராம் சரண் ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீகாந்த், சுனில், ஜெயராம், அஞ்சலி, சமுத்திரக்கனி, பிரம்மானந்தம், நரேஷ், நவீன் சந்திரா, வெண்ணிலா கிஷோர், அச்யுத் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டாபிக்ஸ்