Game Changer Box Office : தொடர் சரிவில் கேம் சேஞ்சர்.. 14 ஆம் நாள் வசூல் நிலவரம் என்ன? ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Game Changer Box Office : தொடர் சரிவில் கேம் சேஞ்சர்.. 14 ஆம் நாள் வசூல் நிலவரம் என்ன? ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

Game Changer Box Office : தொடர் சரிவில் கேம் சேஞ்சர்.. 14 ஆம் நாள் வசூல் நிலவரம் என்ன? ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

Divya Sekar HT Tamil
Jan 24, 2025 10:20 AM IST

Game Changer Box Office : படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை கணித்து கூறும் Sacnilk.com வெளியிட்டுள்ள தகவல்படி, ராம் சரண் மற்றும் இயக்குநர் ஷங்கரின் கூட்டணியில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் 14ஆம் நாள் வசூலில் பின் தங்கியுள்ளது.

Game Changer Box Office : தொடர் சரிவில் கேம் சேஞ்சர்.. 14 நாள் வசூல் நிலவரம் என்ன? ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?
Game Changer Box Office : தொடர் சரிவில் கேம் சேஞ்சர்.. 14 நாள் வசூல் நிலவரம் என்ன? ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

கிட்டத்தட்ட நான்கு வருட தாமதத்துக்குப் பின் இந்த கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. கேம் சேஞ்சர் உலகம் முழுவதும் 6,600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரூ.223 கோடி முதல் நாள் இலக்குடன் பாக்ஸ் ஆபிஸில் நுழைந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை கணித்து கூறும் Sacnilk.com வெளியிட்டுள்ள தகவல்படி, ராம் சரண் மற்றும் இயக்குநர் ஷங்கரின் கூட்டணியில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் 14ம் நாள் வசூலில் பின் தங்கியுள்ளது.

இப்படம், இதுவரை இந்தியாவில் ரூ.128.85 கோடியை வசூலித்துள்ளது. இப்படம் ரூ. 450 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. Sacnilk.com வெளியிட்டுள்ள தகவல்படி,படம் 14 ஆம் நாளில் இந்தியாவில் ரூ.0.75 கோடியை வசூல் செய்துள்ளது. படம் 13 ஆம் நாளில் ரூ.0.8 கோடி வசூலித்தது.

இப்படம் முதல் நாளிலில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சரிவை சந்தித்தது. 2ஆம் நாள், படம் ரூ.21.6 கோடியை வசூல் செய்தது, அதே சமயம் 3ஆம் நாள் வசூல் மேலும் சரிந்தது ரூ.15.9 கோடி, அதைத்தொடர்ந்து 4 நாளில் ரூ.7.65 கோடி, 5ஆம் நாள் ரூ.10 கோடி, 6ஆம் நாள் ரூ.7 கோடி, 7 ஆவது நாளில் ரூ.4.5 கோடியாக வசூல் குறைந்தது.

படம் இரண்டாவது வாரத்தில் நுழையும் போது, ​​வசூல் மேலும் சரிந்தது, 8வது நாளில் ரூ. 2.75 கோடியும், 9வது நாளில் ரூ.2.4 கோடியும், 10வது நாளில் ரூ.2.6 கோடியும் வசூலித்தது. 11ஆம் தேதி ரூ.1 கோடி, 12ஆம் தேதி ரூ.0.9 கோடி, 13ஆம் தேதி ரூ.0.8 கோடியும் வசூல் செய்தது. மொத்தமாக பார்க்கும் போது கேம் சேஞ்சர் படம் இந்திய அளவில் 14ம் நாளில் இந்திய அளவில் ரூ.128.85 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது.

ஓடிடி ரிலீஸ் எப்போ ?

இந்த படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. இந்த நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கேம் சேஞ்சர் படம் காதலர் தின கொண்டாட்டமாக வரும் பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் ஏற்கனவே கைப்பற்றியிருந்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடல்களுக்காக மட்டும் ரூ.75 கோடி

ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியுடன், கேம் சேஞ்சர் படத்தில் அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்களுக்கு தமன் இசையமைத்துள்ளார். ஷங்கர் படத்தின் பாடல்களுக்காக மட்டும் ரூ.75 கோடி செலவிடப்பட்டது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்திற்கான கதையை எழுதியுள்ளார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. 2021 இல் தொடங்கிய படப்பிடிப்பு 2024 இல்நிறைவடைந்தது.

கேம் சேஞ்சர் கதை

கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் ராம் நந்தனாக நடித்துள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பின் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுடன் மோதுகிறார். "மதுரையின் கலெக்டர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார். அரசியல்வாதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு இடையே நடந்த சம்பவங்களை இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக திரையில் கொண்டு வந்துள்ளார்" என்று இந்த படத்தின் விளம்பரப்படுத்தலின் போது எஸ்.ஜே.சூர்யாகூறியிருந்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.