‘அருமை.. அற்புதம்.. பிளாக் பஸ்டர்.. நிச்சயம் நேஷனல் அவார்டு கிடைக்கும்..’ புகழந்த புஷ்பா டைரக்டர்
இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் நடித்ததற்கு ராம் சரணுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என புஷ்பா பட இயக்குநர் சுகுமார் பாராட்டி உள்ளார்.
![‘அருமை.. அற்புதம்.. பிளாக் பஸ்டர்.. நிச்சயம் நேஷனல் அவார்டு கிடைக்கும்..’ புகழந்த புஷ்பா டைரக்டர் ‘அருமை.. அற்புதம்.. பிளாக் பஸ்டர்.. நிச்சயம் நேஷனல் அவார்டு கிடைக்கும்..’ புகழந்த புஷ்பா டைரக்டர்](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/23/550x309/ram_charan_1734939966609_1734940008586.png)
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர், தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் சங்கராந்தி பண்டிகையை ஒட்டி வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது.
ப்ரீ ரிலீஸ் நிகழ்வு
இந்நிலையில், ஷங்கரின் முதல் நேரடி தெலுங்கு படமான கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் சுகுமார் கலந்து கொண்டார். மேலும், இந்தப் படத்தின் நடிகர்கள், தயாரிப்பாளர் தில் ராஜ், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாய்ப்பு கொடுத்தவர்
ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சுகுமார், "தயாரிப்பாளர் தில் ராஜ் எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்தார். என்னை தனித்து நிற்க வைத்து உயர்த்தி தில் ராஜுவின் கடனை என்னால் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது.
நான் எனது முதல் பிலிம்பேர் விருதை இயக்குநர் ஷங்கரிடமிருந்து தான் பெற்றேன். சிரஞ்சீவி ஏன் ஷங்கர் படத்தில் நடிக்கவில்லை, ஷங்கர் ஏன் தெலுங்கில் படம் எடுக்கவில்லை என்ற சந்தேகம் இத்தனை நாள் இருந்து வந்தது.
நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்
ஆனால் ஷங்கர், ராம் சரணை வைத்து ஒரு படம் எடுக்கிறார் என்று தெரிந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ராம் சரண் முதன்முதலில் இதைப் பற்றி என்னிடம் சொன்னதாக ஞாபகம் இருக்கிறது. நான் ஒரு ஹீரோவுடன் படம் பண்ணும்போது அவரை மிகவும் நேசிப்பேன். ராம் சரணுடன் நான் எப்போதும் தொடர்பில் தான் இருக்கிறேன் என்றார்.
அற்புதம்.. பிளாக் பஸ்டர்
ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தை பார்த்த புஷ்பா 2 இயக்குனர் சுகுமார் படத்தின் முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார். படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமார் கேம் சேஞ்சரின் முதல் பாதி அற்புதமாக இருந்தது மற்றும் இடைவேளை பிளாக்பஸ்டர் என்று படம் குறித்த தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.
தேசிய விருது கிடைக்கும்
கேம் சேஞ்சர் படம் பற்றி பேசிய சுகுமார், தான் இந்தப் படத்தை சிரஞ்சீவியுடன் பார்த்ததாகவும், தான் இயக்குநர் ஷங்கரின் 'ஜென்டில்மேன்' மற்றும் 'இந்தியன்' படங்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறினார்.
ராம் சரணுக்கு 'ரங்கஸ்தலம்' படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், இப்போது அது கேம் சேஞ்சர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காகவே அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்றார். இயக்குனர் சுகுமாரின் இந்த கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவின் ராஜா
நிகழ்ச்சியில் பேசிய ராம்சரண், "ஷங்கரின் நண்பன் படத்துக்கு விருந்தினராக நான் சென்றிருந்தேன். அந்த நேரத்தில், நான் அவருடன் பேச மிகவும் பதற்றமாக இருந்தேன். என்னுடன் இல்லாவிட்டாலும் யாருடனாவது ஒரு தெலுங்கு படம் பண்ணுங்கள் என்று கூட அவரிடம் கேட்க முடியவில்லை.
அவர் இந்திய சினிமாவின் மன்னன். கிரிக்கெட்டு ஒரு சச்சின் என்றால் இந்திய சினிமாவிற்கு இயக்குனர் ஷங்கர். அவர் இயக்குனர்களின் இயக்குனர். அத்தகைய தகுதிக்கு சொந்தக்காரரான சங்கர் சாருவுடன் பணியாற்றியது எனது அதிர்ஷ்டம். நான் சோலோ ஹீரோவாக படம் எடுத்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. கேம் சேஞ்சர் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். இந்த படம் யாரையும் ஏமாற்றாது" என்றார்.
கேம் சேஞ்சர்
ராம் சரண் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தில் ராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தில் ராஜ் மற்றும் ஷிரிஷ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்