Ram Charan And Upasana:ஷங்கர் பட நாயகனான ராம்சரண் தாய்லாந்தில் குடும்பத்துடன் லூட்டி;குட்டி யானையை குளிப்பாட்டி உற்சாகம்
Ram Charan and Upasana: ராம் சரண் மற்றும் உபாசனா ஆகியோர் தங்கள் செல்லப்பிராணியான ரைமின் இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் தங்கள் சமீபத்திய குடும்ப விடுமுறையின் ஒரு காட்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
Ram Charan and Upasana: ராம்சரண், தனது குடும்பத்தினருடன் தாய்லாந்தில் இருக்கும் யானைகள் முகாமுக்குச் சென்றுள்ளார்.
நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா கொனிடேலா ஆகியோர் தாய்லாந்தின் கோ சாமுய் நகரில், கோடைகால விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஜோடியுடன் அவர்களின் இல்லத்தின் இளவரசியான மகள் கிளின் காரா மற்றும் அவர்களின் செல்லப்பிராணியான ரைம் ஆகியோரும் உள்ளனர்.
நடிகர் ராம்சரண், தங்களது செல்லப்பிராணியான ரைமின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ரசிகர்களுடன், தங்கள் விடுமுறையின் ஒரு காட்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
ராம்சரண் மற்றும் உபாசனா, தங்களது செல்லப்பிராணியான ரைமின் பதிவிலிருந்து நான்கு படங்களை வெளியிட்டது. அதில், ரைம் நாய்க்குட்டி கடலில் நீந்துகிறது; மேலும் ஒரு பானத்துடன் ரைம் நாய்க்குட்டி மேஜையில் அமர்ந்து போஸ் கொடுக்கிறது. மூன்றாவதாக அது தனது புதிய ஹேர்கட்டை காட்டுவதைப் போல் அப்படத்தில் இருக்கிறது. இறுதியாக, யானை மீட்பு முகாமில் ராம்சரண், உபாசனா மற்றும் மகள் கிளின்காரா ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று இருக்கிறது. அதில் நடிகர் ராம்சரண் ஒரு குட்டி யானையை குளிப்பாட்டுகிறார்.
அதில் செல்லநாய்க்குட்டி ரைமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர், "நன்றி தந்தையே, என் சகோதரி கிளின் காராவுடன் தாய்லாந்திலுள்ள சாமுயில் தீவில் ஒரு குளிர்ந்த அதிர்வை அனுபவித்தேன். கடலில் நீந்துவதும், மீட்பு முகாமில் யானைகளின் பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்வதும் எனக்கு மிகவும் பிடிக்கும். அற்புதமான கவனிப்பு & எனது புதிய தாய் வெட்டுக்கு புய் மற்றும் கெட்டிக்கு பெரிய நன்றி’’ என்று ரைமின் என்னும் நாய்க்குட்டி எழுதியதுபோல், எழுதியுள்ளனர்.
கடந்த வாரம், அவர்கள் ரைமின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து தங்கள் நண்பர்களுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டனர். அதில் அவர்கள் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையை எவ்வாறு கழித்தார்கள் என்பதற்கான படத்தைப் பகிர்ந்து கொண்டனர். விடுமுறையில் இருந்து அவர்கள் பகிர்ந்த முதல் படம் இது ஆகும். இதில் ராம்சரண் மற்றும் ரைம் ஒரு வாடகை விமானத்தில் விடுமுறையைக் கழிக்கச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
புதிய படங்கள்:
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் ‘கேம் சேஞ்சர்’படத்தில், ராம்சரண் நடித்து வருகிறார். தற்காலிகமாக பிரேக் விடப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பில் முன்னதாக, கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம், சுனில், நவீன் சந்திரா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் ராம்சரணின் பிறந்தநாளை ஒட்டி, ‘ஜருகண்டி’ என்னும் தனிப்பாடல் வெளியானது. இது கலவையான வரவேற்பினைப் பெற்று வருகிறது.
அதேபோல், உப்பேனா திரைப்படப் புகழ் இயக்குநர் புச்சி பாபு சனாவுடன் கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட, விளையாட்டுப் படத்திலும் நடிக்க ராம்சரண் ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் ராம்சரணின் ஜோடியாக நடிக்க ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் சமீபத்தில் இந்தப் படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாரும் நடிக்கிறார். அதன்பின், இயக்குநர் கொரட்டல சிவா மற்றும் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடிக்கும் தேவாரா படத்துக்குப் பின், ஜான்வி கபூர் தெலுங்கில் கமிட்டாகும் இரண்டாவது படமாகும். அதேபோல், 2018ஆம் ஆண்டு வெற்றிப் படமான ’ரங்கஸ்தலத்திற்கு’ பின் இயக்குநர் சுகுமாரின் இயக்கத்தில், தனது இரண்டாவது படத்திலும் நடிக்கயிருக்கிறார்.
டாபிக்ஸ்